முகேஷ் அம்பானியின் மருமகள் ஸ்லோகா மேத்தாவின் உலக புகழ்பெற்ற வைர நகை.. விலையை கேட்டால் மயக்கமே வரும்!
மும்பை: இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தாவின் வைரம், மரகதம் பதித்த நெக்லஸின் விலை என்ன தெரியுமா? அதை யார் பரிசாக கொடுத்தது தெரியுமா? உலகிலேயே விலை உயர்ந்தது இதுதானாம்.
முகேஷ் அம்பானி வீட்டில் நடக்கும் விஷயங்கள் எப்படியாவது 27 மாடிகளை கடந்து, 500 அடியை தாண்டி (அம்பானி வசிக்கும் அன்டீலியா வீட்டின் உயரம்) வெளியே வந்துவிடுகிறது. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அம்பானி வீட்டு விஷயங்களை கேட்பதில் மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

நாம் இந்த விலைக்கு ஆடை அணிகிறோம். அம்பானி வீட்டில் எந்த விலைக்கு அணிவார்கள் என்பதெல்லாம் பெரும்பாலானோர் மனதில் எழக் கூடிய கேள்வியாகும். அந்த வகையில் அண்மைக்காலமாக நீடா அம்பானியின் உடை, அணிகலன்கள் குறித்து பார்த்தோம்.
உலகிலேயே மிகவும் விலை அதிகமான புடவையை நீடா வைத்துள்ளார் என்றும் அதன் விலை ரூ 45 லட்சம் என்றும் அந்த புடவையை சென்னை சில்க்ஸ் இயக்குநர்தான் நெய்து கொடுத்தார் என்றும் இந்த சேலையை உருவாக்கும் பணியில் 36 நெசவாளர்கள் ஓராண்டாக பணியாற்றினர் என்றும் தகவல்களை பார்த்தோம். அது போல் அவர் அணிந்திருக்கும் வைரம், மரகதம், வைடூரியம் பதித்த நெக்லஸ்கள் குறித்தும் அறிந்திருக்கிறோம்.

தற்போது முகேஷ் அம்பானியின் மூத்த மருமகள் அதாவது ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவை பற்றி பார்ப்போம். இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா சாதாரணவர் அல்ல, இந்தியாவில் உள்ள ரோஸி புளூ வைர நிறுவனத்தின் உரிமையாளர் ரஸ்ஸல் மேத்தாவின் மகளாவார்.
இருவருக்கும் பல கோடி செலவு செய்து 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஸ்லோகா அணிந்திருக்கும் நெக்லஸ் விலை உயர்ந்தது. அவர் அணிந்திருந்த ஆடைகளும் விலை உயர்ந்தவைதான். பிரபல டிசைனர் அபு ஜானி வடிவமைத்த சிவப்பு தங்க நிற லெஹெங்காவை ஸ்லோகா அணிந்திருந்தார். இதன் விலை ரூ 5 கோடி இருக்குமாம். அவரது வைர நெக்லஸ் கண்களை பறித்தது, இதில் பெரிய வைர கற்களும் மரகதங்களும் பதிக்கப்பட்டது. இதன் விலை ரூ 3 கோடியாம்.

இந்த நெக்லஸை ஸ்லோகாவுக்கு யார் கொடுத்தது தெரியுமா? வேறு யார் மாமியார் நீடா அம்பானிதான் தனது மருமகளுக்கு கொடுத்துள்ளார். இது இல்லாமல் ஸ்லோகா மேத்தா வைத்திருக்கும் நெக்லஸ் எல் இன்கம்பேரபிள் என்ற பெயர் கொண்டது. இதை லெபனான் நகைக் கடை வியாபாரி வடிவமைத்தார். இந்த நகையின் உள்புறம் மஞ்சள் வைரங்கள் இருக்கின்றன. இந்த நகையின் மொத்த விலை ரூ 500 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications