நீடா அம்பானியின் விலை உயர்ந்த கார்.. மிரளும் மும்பை! இவ்ளோ விலையா? ஃபாரின் ரக கார் சும்மாவா?
மும்பை: மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் விலையை கேட்டால் தலையே சுற்றுதே!
நீடா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். இவர் தனக்கென ஒரு காரை தனிப்பட்ட முறையில் கஸ்டமைஸ் செய்து வாங்கியுள்ளார். இவரது காரின் நிறம் ரோஸ் குவார்ட்ஸ் வண்ணத்தில் உள்ளது. அதன் உள்பக்கம் ஆர்க்கிட் வெல்வெட் நிறத்தில் உள்ளது.

மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த ரோஸ் குவார்ட்ஸ், ஆர்க்கிட் வெல்வெட் நிறத்தினாலான கார்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்திய இந்த நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் மிகவும் அரிது.
இனி அந்த காரை பார்த்தாலே நீடா அம்பானியினுடையது என தெரிந்து கொள்ளலாம். அவர் கஸ்டமைஸ் செய்துள்ளதற்கான தனித்தனி செலவுகள் காரின் விலையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. கார் என்ஜினில் அவர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. Rools Royce Phantom VIII EWB இல் டர்போ சார்ஜுடு என்ஜின் உள்ளது.
நீடாவின் புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. எனினும் இந்த கார் இந்தியாவில் 12 கோடிக்கு விற்பனை என தெரிகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது முகேஷ் அம்பானி, நீடாவுக்கு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் எனும் கார்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த கார் மற்ற சொகுசு கார்களை விட விலை குறைவாக இருந்தாலும் இந்த கார்களுக்கு மவுசு அதிகம்தான். கடந்த ஆண்டு பாஜக முன்னாள் எம்எல்ஏவின் விநாயகர் சதுர்த்திக்கு ஆனந்த் அம்பானி நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
4 கல்லினன் கார்களில் ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார். அந்த காரின் விலை ரூ 7 கோடியாம். ஆனால் அவர் கஸ்டமைஸ் செய்ததால் காரின் விலை ரூ 14 கோடி இருக்கும் என தெரிகிறது. காரின் நிறமும் தங்கமும், சில்வரும் கலந்து இருந்தது. அது போல் துபாயில் ஒரு ஷாப்பிங் மாலில் ஆனந்த் அம்பானி சென்ற போது 20 கார்களை கொண்ட கான்வாயில் அவர் வந்தது வைரலாகி வருகிறது.
இவர் கொண்டு சென்றது ஆரஞ்சு நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கருப்பு பேட்ஜ் கார். அவருடன் பாதுகாப்பிற்காக 20 எஸ்யூவி கார்களில் எஸ்கார்ட்கள் வந்தனர். ஒரு சூட்கேஸ் வாங்குவதற்காக ரூ 25 கோடி மதிப்பிலான காரில் அவர் வந்திருந்தார். நீடாவும் தான் எதை வாங்கினாலும் அதை தனித்துவமான முறையில்தான் வாங்குவார். அந்த வகையில் இவர்களது கார் பல்வேறு தனித்துவங்களை பெற்றுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications