மருமகளை இடுப்பில் வளைத்து பிடித்த அம்பானி.. அத்தனை பேர் முன்பும் சம்பவம்.. கிளம்பியது அடுத்த சலசலப்பு
மும்பை: அம்பானி வீட்டுக்குள் எந்த நிகழ்வு நடந்தாலும், அது மீடியாவில் பரபரப்பாக மட்டுமல்லாமல் ஆச்சரியமாகவும் பேசப்பட்டுவிடும். இப்போதும் அப்படித்தான் 2 விஷயங்கள் இப்போது இணையத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அம்பானி - நீடாவின் மகன் ஆனந்த், ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.. இந்த சடங்குகளுக்கு, விஐபிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

திருமணம் : 3 நாட்கள் நீடித்த திருமண விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்.. இவர்கள் தினந்தோறும் இரவில் நடக்கும் சடங்குகளிலும் பங்கேற்று வந்தனர்.. இந்த சடங்குகள் முதல் திருமண வைபவம் வரை, மணமக்கள் அணிந்திருந்த ஆடைகள், அம்பானியும், அவரது மனைவியும் அணிந்திருந்த ஆடைகள், அணிகலன்கள் எல்லாமே பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
சமீபத்தில்கூட, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை இந்த தம்பதியினர் சிறப்பாக கொண்டாடியிருந்தனர்.. அப்போது லால்பாக் ராஜாவிற்கு 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தார் ஆனந்த் அம்பானி. கடந்த 15 வருடங்களாகவே, மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா (Lalbaugcha Raja) விநாயகரை தனது குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்வது ஆனந்த் அம்பானியின்
வழக்கம்.
தங்க நகைகள்: அந்தவகையில், இப்போது திருமணம் முடிந்துள்ளதால், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்கத்தில் தயாரிக்கப்பட்ட கிரீடத்தை லால்பாக் ராஜாவிற்கு காணிக்கையாக்கியிருந்தார். இந்த செய்தி மிகப்பெரிய ஆச்சரியத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தது.
இப்போது இன்னொரு செய்தி இந்த குடும்பத்தை பற்றி வெளியாகியிருக்கிறது.. நேற்றைய தினம், முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி தலைமையில், ஒட்டுமொத்த அம்பானி குடும்பத்தினரும் சேர்ந்து விநாயக சதுர்த்தி விழாவை தங்களுடைய வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடியிருக்கிறார்கள்..
கணேஷ் சதுர்த்தி: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு பிறகு வரும் முதல் விநாயக சதுர்த்தி என்பதால், இந்த கணேஷ் பண்டிகை சற்று வித்தியாசமாகவும், கூடுதல் கொண்டாட்டத்துடனும் சிறப்பிக்கப்பட்டது.. இந்த நிகழ்விலும் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. இந்த சதுர்த்தி விழாவின்போது, புகைப்பட கலைஞர்களுடன் உரையாடும் வீடியோவில் முகேஷ் அம்பானி, தன்னுடைய மருமகள் ராதிகாவை வயிற்றில் பிடித்து இழுத்துள்ளார்.. இத்தனைக்கும் தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா முன்னிலையிலேயே, ராதிகாவிடம் இப்படி நடந்து கொண்டதாக கூறுகிறார்கள்.
முகேஷ் அம்பானி: இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இப்படி கூட மருமகளை கட்டி இழுப்பார்களா? முகேஷ் அம்பானிக்கு யாராச்சும், "நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்" பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதேபோல, திருமணத்தில் ராதிகா அணிந்திருந்த நெக்லஸும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த நெக்லஸும் விலைமதிப்பற்ற லெஹெங்காவுடன் பல அடுக்கு நகைகளை அணிந்திருந்தார்..
கண்ணை பறித்த நெக்லஸ்: திருமணத்தில், ராதிகா குந்தன் சோக்கர், லெஹங்காவுடன் கூடிய பல அடுக்கு நெக்லஸில் மிகவும் அழகாக இருந்தார். கல்யாணத்தில், தன்னுடைய சகோதரியின் நெக்லஸை ராதிகா ஏன் அணிந்தார்? என்பது முதல் அடுக்கடுக்காக கண்ணை பறித்த இந்த நெக்லஸும் திடீரென இப்போது நிறைய விவாதிக்கப்படுகிறது.
அதேபோல, ராதிகா அணிந்திருந்த குந்தன் சோக்கர், மாங்க்டிகா, ஹாத்பூல் மற்றும் கம்மல்களை அவரது சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட் அவரது திருமணத்தில் அணிந்திருந்தார். இதுவும் வியப்பை தந்து வருகிறது.
பிசினஸ்மேன்: ஆனந்த் அம்பானி திருமணத்திலேயே, அஞ்சலி மெர்ச்சண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.. தன்னுடைய அழகால் அனைவரின் இதயங்களையும் வென்றவர் அஞ்சலி.. மிகச்சிறந்த பிசினஸ்வுமனாக தன்னுடைய பங்களிப்பையும் தந்து வருபவர் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications