முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீட்டை கூட்டி பெருக்கவும் கல்வி தகுதி மஸ்ட்! ஊதியம் என்ன தெரியுமா?
மும்பை: இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீட்டில் பணியாற்றும் ஊழியர்களின் கல்வித் தகுதி என்ன , அவர்களுக்கான ஊதியம் என்ன தெரியுமா?
இந்திய பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி. இவருக்கு சொந்தமான மும்பை அன்டீலியா வீடு உலகில் மிக விலையுயர்ந்த 10 வீடுகளில் ஒன்று.
இந்த வீட்டை பராமரிக்க மட்டுமே முழு நேரமும் 600 பணியாளர்கள் உள்ளனர். சிகாகோ நாட்டை சேர்ந்த கட்டடக் கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டது. இந்த வீட்டில் 27 மாடிகள் உள்ளன. மொத்தம் 4 லட்சம் சதுர அடியாகும். இங்கு லிப்ட்கள் மட்டுமே 11 உள்ளன.

570 அடி உயர கட்டடம்
அந்த வீட்டின் உயரமே 570 அடியாகும். அத்தனை பிரம்மாண்டமான கட்டடம் அன்டீலியா ஆகும். இந்த வீட்டில் 24 மணி நேரமும் செயல்படும் அளவில் பணியாள்கள் உள்ளனர். வீட்டை துடைப்பது, பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது, உணவு சமைப்பதில் செஃப்களுக்கு உதவி செய்வது என எல்லா வேலைகளுக்கும் பணியாட்கள் இருக்கிறார்கள்.

கார் ஓட்டுநர்
அது போல் கார் ஓட்டுநர்களும் உள்ளார்கள். இவரது வீடு மும்பையில் பணக்காரர்கள் நிறைந்துள்ள கர்மிஷல் சாலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ 1500 கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த வீட்டிலேயே 24 மணி நேரமும் தங்கும் தொழிலாளர்களுக்காக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இரவு நேரத்தில் தூங்கி ஓய்வு எடுக்கலாம்.

கல்வித் தகுதி
அம்பானி வீட்டில் பணியாற்றுவோரின் கல்வித் தகுதி, ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பணியாற்றுவோருக்கு மாதத்திற்கு ரூ 2 லட்சம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது. இதே ஆண்டுக்கு ரூ 24 லட்சமாகும். அது போல் அந்த தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, குழந்தைகளின் கல்வி கட்டணம் அனைத்தையும் அம்பானி வீட்டாரே ஏற்பார்களாம். எல்லா சலுகைகளும் உள்ளது.

சொகுசு வீடு
2 லட்சம் சம்பளம் சொகுசு வீட்டில் உலா வரலாமே என நினைத்து உடனே வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுட போறீங்க! அம்பானி வீட்டில் வேலைக்கு எடுக்க பல்வேறு நேர்காணல்கள் இருக்கிறதாம். ஐடி நிறுவனத்தில் நடத்தப்படும் நேர்காணலை விட மிகவும் கடினமாக இருக்குமாம். போலீஸில் அவர்களுடைய பேக்கிரவுண்ட் விசாரிக்கப்படுமாம். அத்துடன் வீட்டில் வேலை செய்வதற்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்க வேண்டுமாம். இத்தனையும் இருந்தால்தான் மாதம் சொளையா ரூ 2 லட்சம் கிடைக்கும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications