Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் சொன்ன அந்த "பாயிண்ட்.." ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமா? ஆஹா!

சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, அதிமுக விவகாரத்தில் பொருத்தி பார்த்தால் எடப்பாடிக்கு சாதகமாக இருப்பது போல தெரிந்தாலும் ஓபிஎஸ்க்கு சாதகமாக சில பாயிண்ட்களும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இருவரும் கட்சிக்கு உரிமை கோரி வந்த நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு கட்சியின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு அதிமுக விவகாரத்திலும் பொருத்தி பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருப்பது போல தெரிந்தாலும் ஓபிஎஸ்க்கு சாதகமாக சில பாயிண்ட்களும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. பின்னர் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலில் இந்தக் கூட்டணி உடைந்தது.

யாரும் எதிர்பாராத வகையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த சிவசேனா ஆட்சியை பிடித்தது. இந்த ஆட்சி 3 ஆண்டுகள் எந்த சிக்கலும் இன்றி சுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆளும் சிவசேனா கட்சியில் திடீர் கலகம் ஏற்பட்டது.

இரு பிளவாக சிவசேனா

இரு பிளவாக சிவசேனா

சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக அந்தக் கட்சி உடைந்தது. இதனால், உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருந்ததால், நாங்கள்தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். உத்தவ் தாக்கரே தரப்பு நாங்கள் தான் உண்மையான சிவசேனா என முறையிட்டது.

சின்னம் முடக்கம்

சின்னம் முடக்கம்

இதற்கு மத்தியில் அந்தேரி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வந்ததால் சிவசேனா கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகளும் கட்சிக்கு உரிமை கோரி பல்வேறு ஆவணங்களை சமர்பித்தனர். ஏக்நாத் ஷிண்டே தரப்பில், கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மொத்தம் உள்ள 18 எம்.பி.க்களில் 13 பேரின் ஆதரவு கடிதம் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து இருந்தனர்.

ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா

ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா

அதேபோல், உத்தவ் தாக்கரே தரப்பும் 15 எம்.எல்.ஏ.க்கள், 5 எம்.பி.க்கள் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள், 2 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகளின் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தது. இரு தரப்பிலும் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இவற்றை பரிசீலித்த தேர்தல் ஆணையம், நேற்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 78-பக்கங்களை கொண்ட அந்த உத்தரவில், பெரும்பான்மை அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என அங்கீகாரம் கொடுத்தது.

இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே பிளவு

இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே பிளவு

அதாவது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த ஏக்நாத் ஷிண்டே அணிக்கு உரிமை அளித்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதை அடிப்படையாக வைத்து அவர்கள் தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கடந்த 2017- ஆம் ஆண்டு அதிமுகவில் எழுந்த பிரச்சினையையும் மேற்கோள் காட்டியிருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தமிழக அரசியலிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஏனெனில் அதிமுகவில் தற்போது இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுக விவகாரம் எப்படி செல்லும்

அதிமுக விவகாரம் எப்படி செல்லும்

இருவரும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் இடைக்கால நிவாரணம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுக விவகாரம் எப்படி செல்லும் என்பது அடுத்து தெரிய வரும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தேர்தல் ஆணையம் அதிமுக விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இருக்கும்?

ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இருக்கும்?

சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுத்து இருப்பதால் அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை கட்சியில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் ஆதரவுடன் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமான முடிவாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் பலரின் கருத்தாக உள்ளது. அதேபோல், அரசியல் வல்லுனர்கள் சிலரும் இதே கருத்தை முன் வைக்கின்றனர். ஆனாலும், சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஒரு முக்கிய பாயிண்ட் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இருக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

கட்சி விதிகள் திருத்தப்பட்டது

கட்சி விதிகள் திருத்தப்பட்டது

அதாவது சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம், கட்சியின் விதிகளை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறது. சிவசேனாவின் கட்சி விதிகள் சில ஜனநாயகத்திற்கு புறம்பாக இருப்பதாகவும் ஜனநாயகம் இல்லை என்று விமர்சனம் முன்வைத்துள்ளது. குறிப்பாக 2018- ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே பொறுப்பேற்ற பிறகு கட்சி விதிகள் திருத்தப்பட்டது. கட்சித் தலைவருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டது. 2018-ல் திருத்தப்பட்ட விதிகள் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் இல்லை" என்று தெரிவித்து இருக்கிறது.

 பெரும்பான்மையை மட்டும் பார்க்கவில்லை

பெரும்பான்மையை மட்டும் பார்க்கவில்லை


அதிமுகவிலும் கடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை நாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. எனினும், நீதிமன்ற வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் இவ்வாறு கூறியிருந்தது. எனினும் சிவசேனா விவகாரத்தை பொருத்தவரை தேர்தல் ஆணையம் வெறும் பெரும்பான்மையை மட்டும் பார்க்கவில்லை. கட்சியின் விதிகளையும் பார்த்து இருப்பது தெரியவந்துள்ளது.

சிவசேனா - அதிமுக விவகாரம்

சிவசேனா - அதிமுக விவகாரம்

எனவே, அதிமுக விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையை வைத்து மட்டும் முடிவு எடுக்காது என்பது அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக எடப்பாடிக்கு ஆதரவாக அமைந்து விடும் என்ற முடிவுக்கு வர முடியாது என்ற வாதத்தையும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் சிவசேனா - அதிமுக விவகாரத்தை ஒப்பிட்டு பார்த்தால் பல்வேறு சிக்கலான கேள்விகளும் எழாமல் இல்லை.

தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா?

தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா?

சிவசேனா வழக்கை பொறுத்தவரை கட்சி விதிப்படியும் பெரும்பான்மை அடிப்படையிலும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவாகத்தான் நிலைமை இருந்தது என தேர்தல் ஆனையத்தின் உத்தரவு காட்டுகிறது. எனவே, அதிமுக விவகாரத்தில் பெரும்பான்மை எடப்பாடிக்கு இருந்தாலும் கட்சி விதிகள் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பார்வை எப்படி இருக்கும்.. என்ன மாதிரியான முடிவை எடுக்கும்.. அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? என்பதன் அடிப்படையில்தான் முடிவு அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+