அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்? டிரம்ப் vs கமலா ஹாரிஸ்.. பிரபல ஜோதிடர் கணிப்பு
மும்பை: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டுகிறார்கள். இதில் வெற்றி பெற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், மும்பையை சேர்ந்த ஜோதிடர் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி கணித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், பிரசாரத்தில் தடுமாற்றம், உடல் நல பிரச்சினை ஆகியவற்றால் ஜோ பைடனே போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு பெருகியுள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த ஜோதிடர் கூறுகையில், "கடந்த அமெரிக்க தேர்தலின் போது, ஜோ பைடன் தான் வெற்றி பெறுவார் என்று நான் கணித்து கூறினேன். ஆனாலும் டிரம்பே வெற்றி பெறுவார் என்று சொன்னவர்கள் என்னை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர்.
ஆனால், எனது கணிப்பு தேர்தல் முடிவுக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது. டிரம்ப் ஆதராவளர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் எனவும் நான் கணித்தேன். அதுவும் அப்படியே நடந்தது. தற்போது, வரும் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், டிரம்பும் பைடனும் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் பைடன் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால், டிரம்பும் - கமலா ஹாரிசும் போட்டியிட்டுகிறார்கள்.
இவர்களின் பிறந்த வருடம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கணித்ததில், டிரம்பே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டிரம்பிற்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா போட்டியிட்டால் அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் மிட்செல் ஒபாமா தனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார்.
எனவே அதற்கு வாய்ப்பு இல்லை. தற்போதைய நிலையில், டிரம்ப், கமலா ஹாரிஸ் போட்டி என்ற நிலை நீடிக்கிறது. இதில் டிரம்பே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஒருவேளை கமலா ஹாரிஸ்க்கு பதிலாக , ஜனநாயக கட்சியில் வேறு யாராவது நிறுத்தப்பட்டால், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது பற்றி மீண்டும் கணிக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை" என்றார்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications