ஏன் ஓடி ஒளிகிறார்.. எதை மறைக்கிறார்.. சுஷாந்த் சிங் மரணத்தில் குறி வைக்கப்படும் காதலி ரியா.. மர்மம்!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக அவரின் காதலில் ரியா சக்ரபோர்த்தி பேசி வருவது நிறைய சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, யாரவது அவரை தற்கொலை செய்ய தூண்டினார்களா, அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளது . கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.

நிறைய காரணம்
இவரின் தற்கொலைக்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது. மன அழுத்தத்தில் இவர் கஷ்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் என்று கூறப்பட்டது. மும்பை போலீஸ் இவரின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பீகாரில் சுஷாந்த் சிங் தந்தை கேகே சிங் புகார் அளித்துள்ளார்.

என்ன புகார்
கேகே சிங் புகாரில், என் மகனை அவரின் காதலி ரியா ஏமாற்றிவிட்டார். பண ரீதியாக ரியா சுஷாந்த் சிங்கை ஏமாற்றி விட்டார், சுஷாந்த் சிங்கை மனரீதியாக ரியா கொடுமைப்படுத்தினார் என்று சுஷாந்த் சிங் தந்தை கேகே சிங் புகார் வைத்துள்ளார். சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து 15 லட்சம் ரூபாய் மாயமாகிவிட்டது என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பீகார் அரசின் கோரிக்கையின் பெயரில் சிபிஐ போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு தற்போது சுஷாந்த் சிங் காதலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இதில் சிபிஐ விசாரணையை மேற்கொள்ள கூடாது. இது உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எதிரானது. இந்த வழக்கு மும்பையில் பதியப்பட்டு இருக்கிறது. அதனால் மும்பை போலீஸ் மட்டுமே விசாரிக்க வேண்டும். சிபிஐ இதை விசாரிப்பது மாநில உரிமைக்கு எதிரானது.

எதிரான கொலை
சிபிஐ விசாரணையை நடந்தால் இதில் நியாயமாக இருக்காது. பீகார் அரசின் அழுத்தத்தின் பெயரில் இந்த விசாரணை நடக்கிறது. கே கே சிங் ஒரு போலீஸ் என்பதால் அவர் கொடுத்த அழுத்தத்தால் இந்த விசாரணை நடக்கிறது. மும்பை போலீஸ் மட்டுமே இதை விசாரிக்க வேண்டும். பீகார் அரசு இதில் அரசியல் செய்கிறது என்று ரியா குறிப்பிட்டு இருக்கிறார்.

சந்தேகம் வலுக்கிறது
சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு எதிராக அவரின் காதலில் ரியா சக்ரபோர்த்தி பேசி வருவது நிறைய சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் தற்போது ரியா மீது சந்தேகம் வலுக்கிறது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். தான் தவறு செய்யவில்லை என்றால் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது தான், ஏன் ஓடி ஒளிகிறார், எதை மறைகிறார் என்று கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

சரமாரி கேள்விகள்
அதேபோல் சுஷாந்த் சிங் கணக்கில் இருந்த 15 கோடி ரூபாய் பணம் எங்கே சென்றது. அதை ரியா எடுத்துவிட்டாரா. ரியா ஏன் சுஷாந்த் சிங் போன் நம்பரை பிளாக் செய்தார், என்று நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள்.. ஆனால் ரியா சக்ரபோர்த்தி பேசுவதை பார்க்கும் போது அவர் எதையோ மறைப்பது போல இருப்பது நெட்டிசன்கள் சந்தேகிக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications