மும்பை அருகே அரபிக்கடலில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
மும்பை: மும்பை அருகே அரபிக்கடலில் இரவு 9.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
அரபிக்கடலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையை ஒட்டியுள்ள அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது. இரவு 9.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. முன்னதாக ஆப்கான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

ஆப்கானிஸ்தானில் நேற்று முன் தினமும் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தது. பைசாபாத் நகரத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் 80 கி.மீ. ஆழத்தில், 4.4 ரிக்டர் அளவில் எற்பட்டது. சிறிது நேரத்தில், , 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன.
இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்ததை காண முடிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், மீண்டும் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டி மற்றும் அதனை தொடர்ந்து அரபிக்கடல் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது

புத்தாண்டு தினத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்த நிலநடுக்கத்தால் ஜப்பான் நிலைகுலைந்தது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுனாமி அலைகளும் தாக்கியது. ஜனவரி 1 ஆம் தேதியே இயற்கை பேரிடர் ஜப்பானை மிரட்டி விட்டு சென்றது. ஜப்பானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 62 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications