போட்டி தலைமை அலுவலகம்! மாநிலம் முழுக்க கட்சி ஆபீஸ்! ஷிண்டேவின் பிரம்மாண்ட பிளான்! தாக்கரேவுக்கு செக்
மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் முடிந்துள்ள நிலையில், கட்சி யாருக்குச் சொந்தம் என்ற பஞ்சாயத்து நீண்டு கொண்டே போகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த அரசியல் குழப்பம் அனைவரும் ஞாபகம் இருக்கும். அங்கு ஆட்சியில் இருந்த மகா விளாஸ் கூட்டணி கவிழ்ந்தது.
கட்சி முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டில் இருந்ததாக நினைத்து உத்தவ் தாக்கரேவுக்கு பெரிய ஷாக் காத்திருந்தது. ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் அணி வகுத்தனர்

மகாராஷ்டிரா
இதன் காரணமாக சுமார் 2.5 ஆண்டுகளில் அந்த நீட்டித்த அந்த கூட்டணி கடந்த மாதம் கவிழ்ந்தது. ஷிண்டே தனது அதிருப்தியாளர்களைத் திரட்டிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தார். காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணி முறித்துக் கொண்டு பாஜக உடன் ஷிண்டேவின் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. ஷிண்டே முதல்வராகவும் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

ரியல் சிவசேனா
அதன் பின்னர் யார் ரியல் சிவசேனா என்ற பஞ்சாயத்து ஷிண்டே மற்றும் தாக்கரே இடையே நடந்து வருகிறது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஷிண்டே தரப்பு தங்களுக்கு எனப் புதிதாகக் கட்சி தலைமையிடத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது சிவசேனாவின் போட்டி தலைமை அலுவலகமாகச் செயல்பட உள்ளது.

சிவசேனா பவன்
தலைமையிடமாகச் செயல்பட சிவசேனா பவனைத் தவிர, மகாராஷ்டிராவில் அனைத்து முக்கிய இடங்களிலும் கட்சி அலுவலகத்தைத் திறக்கவும் ஷிண்டே தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய தலைமை அலுவலகம் கட்டும் இடம் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மும்பையின் தாதரில் தற்போதுள்ள அமைந்துள்ள தாக்கரேவின் சிவசேனா பவனுக்கு மிக அருகில் இருக்கும் வகையில் புதிய இடத்தை ஷிண்டே ஆதரவாளர்கள் தேடி வருகின்றனர்.

விளக்கம்
இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவசேனா பவனுக்கு முதலில் ஷிண்டே உரிமை கோரி இருந்தார். அதற்கு உத்தவ் தாக்கரேவிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இப்போது புதிய தலைமை அலுவலகம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் உதய் சமந்த், விளக்கம் அளித்துள்ளார்.

மதிக்கிறோம்
அமைச்சர் உதய் சமந்த் இது குறித்துக் கூறுகையில், "தாதரில் போட்டி சிவசேனா பவனை நாங்கள் கட்ட உள்ளதாக வெளியாகும் கருத்து பொய்யானது. அதேநேரம் பொது மக்களை முதல்வர் எளிதாகச் சந்திக்கும் வகையில், தலைமை அலுவலகம் ஒன்றைக் கட்ட முயல்கிறோம். சிவசேனா பவனை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர அரசியல்
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்குப் பின்னர் ஷிண்டேவும் பட்னாவிஸும் மட்டுமே பதவி ஏற்று இருந்தனர். சுமார் 40 நாட்களுக்குப் பின்னரே, அமைச்சரவை விரிவு செய்யப்பட்டது. மொத்தம் 19 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். பாஜகவில் இருந்து 9 பேரும் சிவசேனாவில் இருந்து 9 பேரும் இந்த புதிய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications