"மத்திய அரசின் அடிமை".. கொந்தளித்த உத்தவ் தாக்கரே.. தேர்தல் ஆணையம் மீது கடும் தாக்கு
"இந்தியத் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அடிமை என்பது தெரிந்த விஷயம்தான். அப்படியிருக்கையில், சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை"
மும்பை: சிவசேனா கட்சியை ஷிண்டே அணிக்குச் சொந்தம் என அறிவித்த இந்திய தேர்தல் ஆணையத்தை மத்திய அரசின் அடிமை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இறுதித் தீர்ப்பு அல்ல எனக் கூறிய உத்தவ் தாக்கரே, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வோம் எனவும் கூறியுள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, இந்தியாவில் சுதந்திரம் இல்லை என்றும் அராஜகம் தொடங்கிவிட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துவிடலாம் என்றும் அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரேவுக்கு சம்மட்டி அடி
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவின் துணையுடன் ஆட்சி நடத்தி வருபவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இதனிடையே, சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரே அணியும், ஷிண்டே அணியும் சொந்தம் கொண்டாடி வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், சிவசேனா கட்சி ஷிண்டே அணிக்கே சொந்தம் எனத் தீர்ப்பளித்தது. மேலும், அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியது.

பதற்றத்தில் மகாராஷ்டிரா
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, உத்தவ் அணிக்குப் பெருத்த பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் இரு அணிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் காணப்படுகிறது. இதனால் பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"மத்திய அரசின் அடிமை"
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது: இந்தியத் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அடிமை என்பது தெரிந்த விஷயம்தான். அப்படியிருக்கையில், சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இது முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதான். ஒரு கட்சியின் அங்கீகாரம் குறித்துத் தேர்தல் ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு முடிவு செய்ய முடியும்? அவர்கள் விலைபோக அதிக வாய்ப்பிருக்கிறது.

"உச்ச நீதிமன்றம் செல்வோம்"
சிவசேனாவில் இருந்து அணி தாவிய எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது கட்சியையும், சின்னத்தையும் எப்படி ஒரு அணிக்கு ஒதுக்க முடியும்? மும்பை மாநகராட்சி தேர்தல் வருவதால் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் பேரில், இப்படி அவசரகதியாக அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, இந்தியாவில் சுதந்திரம் முடிவடைந்து, அராஜகம் தொடங்கிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துவிடலாம். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை நாங்கள் ஏற்கப்போவதில்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் செல்லவுள்ளோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications