Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. அதென்ன ஆனந்த் அம்பானியின் குர்தா மேல பளபள "சிறுத்தை".. நீதா அம்பானி வேற கலக்கிட்டாங்களே..!

ஆனந்த் அம்பானி அணிந்திருந்த நிச்சயதார்த்த குர்தா அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. அன்றைய தினம் அவர் அணிந்திருந்த ஆடை, அலங்காரம், இப்போதும் இணையத்தில் சுவாரஸ்யமாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி... இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது..

கடந்த வாரம், சங்கீத் விழாவும் நடைபெற்றது. அம்பானி வீட்டில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு, தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்...

 நாய் மோதிரம்

நாய் மோதிரம்

விழாவில், வளர்ப்பு நாய் மோதிரம் கொண்டு வந்து கொடுத்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.. திருமணத்திற்கு முன்பு நடக்கும் இந்த விழாவை குஜராத்தில் கோல் தானா விழா என்று சொல்வார்கள். கோல் என்றால் வெல்லம், தானா என்றால் கொத்தமல்லி விதைகள்.. இந்த இரண்டையும் நிச்சயத்தார்த்த விழாவின்போது, மணமகன் வீட்டில் கொண்டு வருவார்கள்.. அதேபோல, மணமகளின் குடும்பத்தினர் பரிசுகள், இனிப்புகளுடன் வருவார்கள்... ஜோடி இருவரும் மோதிரங்களை மாற்றிக் கொண்டு, 5 சுமங்கலி பெண்களிடம் ஆசி வாங்குவார்கள்..

 2 விஷயங்கள்

2 விஷயங்கள்

நிச்சயதார்த்தம் தினத்தன்று, அம்பானி தன்னுடைய குடும்பத்தினருடன் மேடையேறி மிக அழகாக டான்ஸ் ஆடி, மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி சர்ப்ரைஸ் தந்தது, அங்கிருந்த அனைவரையும் திகைப்பிலும் மகிழ்ச்சி ஆழ்த்திவிட்டது.. அந்த நிச்சயதார்த்த சம்பவ நிகழ்வுகள் குறித்து தினமும் ஏதாவது ஒரு செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.. இப்போதுகூட, 2 முக்கிய சம்பவங்கள் அந்த நிச்சயதார்த்தம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. முதலாவதாக, மணமகன் ஆனந்த் அம்பானியின் உடை அனைவரையும் ஈர்த்து வருகிறது.. சமீபகாலமாகவே, அவரது உடல் எடை அதிகரிப்பு பேசும் பொருளாக மாறி வருகிறது.. கடுமையான பயிற்சிகள் மூலம் தன் உடல் எடையை குறைத்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்த ஆனந்த் அம்பானி, மீண்டும் உடல் எடை அதிகரிப்பால் பேசு பொருளாக மாறியிருக்கிறார்.

 நீலநிற குர்தா

நீலநிற குர்தா

அடுத்ததாக, அவர் அணிந்திருந்த உடை பெரிதும் கவரப்பட்டுள்ளது.. அன்றைய தினம் நீலநிற குர்தா அணிந்திருந்தார் ஆனந்த்.. அவரது குர்தாவின் இடப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த ப்ரூச் அனைவரின் கவனத்தையும் திருப்பியது.. அது தங்கம், வைரம், மரகதங்களை வைத்து அந்த ப்ரூச் செய்யப்பட்டிருந்தது.. சிறுத்தையின் மூக்கு கருப்பு நிறத்திலும், அதன் கண்கள் பச்சை கலர் மரகதங்களாலும் டிசைன் செய்யப்பட்டிருந்தன. சரித்திர புகழ்மிக்க இந்த புரூச்சை அணிவது, தனித்துவமான அடையாளத்தை தரும் என்பதாலேயே ஆனந்த் அம்பானி அன்றைய தினம் இதை குர்தாவின்மீது அணிந்திருந்தார்.

பிளாட்டினம்

பிளாட்டினம்

புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், கலை கண்காணிப்பாளருமான தீப்தி சசிதரன் என்பவர், இந்த ப்ரூச் பற்றி சொல்லும்போது, அந்த காலத்தில் ராஜபரம்பரை சேர்ந்தவர்கள் இந்த ப்ரூச்சை அணிந்து கொள்வார்கள்.. வரலாற்று முக்கியத்துவத்தை பெற்ற இந்த ப்ரூச்சானது, தங்கத்தால் அல்லது பிளாட்டினத்தினால் செய்யப்படுபவை. ராஜவம்சத்தை சேர்ந்தவர்கள் இதை அணிவதால், பார்ப்பதற்கு மேலும் ஆடம்பரமாக காணப்படுவார்கள் என்கிறார். அசல் ப்ரூச் என்பது, 6.5 செமீ நீளத்தில், வைரங்கள் மற்றும் மாணிக்கங்களால் பதிக்கப்பட்டவை என்கிறார்கள்.. 2 சிறுத்தைகள் இருக்குமாம்.. இப்போது, ​​கார்டியர் ப்ரூச் அணிவது, ஆடம்பத்தின் அடையாளமாக மாறி உள்ள நிலையில், விஐபிக்களும் இதை அணிய துவங்கி உள்ளனர்..

டிரெண்டிங்

டிரெண்டிங்

அதேபோல, இன்னொரு செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. பாலிவுட் ஸ்டார்கள் எல்லாம் கலக்கலான டிரஸ்களுடன், மிடுக்காக அன்றைய தினம் வந்திருந்தாலும், முகேஷ் அம்பானியின் மனைவி, நீதா அம்பானியோ மொத்த பேரின் மனங்களை கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.. பொதுவாக, தொழிலதிபர்கள், விஐபிகள், பணக்காரர்கள் பலர், தங்களுடைய டிரஸ்களையும், ஆபரணங்களையும், மார்டனாக இருக்கம்படி பார்த்து கொள்வார்கள். அதாவது, தற்சமயம் டிரெண்டிங்கில் உள்ள, ஆடை, அணிகலன்கள் மீது கவனம் செலுத்துவார்கள்..

 வேலைப்பாடு

வேலைப்பாடு

காலத்துக்கேற்படி தங்களை அப்டேட்டாக வைத்து கொள்வார்கள்.. அதனால்தான், ஒருமுறை அணிந்த டிரஸ்ஸையே, 2வது முறை அணியமாட்டார்கள்.. திரும்பத் திரும்ப அணிவதில் ஆர்வமும் காட்ட மாட்டார்கள்.. ஆனால் நீதா அம்பானி என்ன செய்தார் தெரியுமா?அன்றைய தினம் ஜொலிஜொலிக்கும் லெஹங்கா அணிந்திருந்தார்.. ஜர்தோசி, சிக்கன்காரி எம்பிராய்டரியால் அந்த டிரஸ் டிசைன் செய்யப்பட்டது.. அதில், பட்டோலா பட்டு போன்ற வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.. அந்த டிரஸ்ஸூக்கு மேட்ச்சிங்காக நெக்லஸ் மட்டுமே அணிந்திருந்தார் நீதா.. அதுவும் பழைய நெக்லஸ்.. ஆனால் அந்த நெக்லஸில் உயர்தர வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன...

 பழைய நெக்லஸ்

பழைய நெக்லஸ்

இப்பேர்ப்பட்ட பணக்காரரின் மனைவி, ஒரு பழைய நெக்லஸுடன் மகனின் நிச்சயதார்த்ததில் பழைய நெக்லஸை அணிந்திருந்ததுதான் பேசுபொருளாகி உள்ளது.. இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. இதே நெக்லஸைதான், தன்னுடைய இஷா அம்பானி கல்யாணத்திலும் இவர் அணிந்திருந்தார்.. வீட்டில் எந்த சின்ன விசேஷம் என்றாலும், உடனே புது டிரஸ், புது நகைகளை வாங்கும் மிடில்கிளாஸ் மக்கள் மத்தியில், அம்பானி மனைவி, செலவுகளை கூட்டாமல், இப்படி பழைய நகையை போட்டு கொண்டு வந்துள்ளாரே என்று பலரும் அவரை பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+