செம! பிடிச்ச ஸ்மார்ட் போன்களை கம்மி ரேட்டில் வாங்கலாம்.. ஆஃபர்களை தொடங்கிய அமேசான், பிளிப்கார்ட்!
மும்பை: முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் Big Billion Days Sale இன்று (அக்.08) முதல் தொடங்கியுள்ளது. கேட்ஜெட்களுக்கு பல அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது.
இ காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தக முறை தற்போது இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. வீட்டில் இருந்தபடியே பிடித்த பொருட்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என்பதாலும் டெலிவரியும் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து கொடுத்து விடுவதால் பொதுமக்களுக்கு இ காமர்ஸ் முறையில் பொருட்களை வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அமேசான் மற்றும் பிளிப் கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த துறையில் முன்னணி வகிக்கின்றன.

வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது ஆஃபர்களை இந்த நிறுவனங்கள் போட்டி போட்டு அளிக்கின்றன.அந்த வகையில் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2023 சேல் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. வரும் 15 ஆம் தேதி வரை இந்த சலுகை உள்ளது. வாடிக்கையாளர்களை கவர பல கவர்ச்சிகரமான ஆஃபர்களை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மொபைல் போன்கள், லேப்டாப், டேப்ளட்ஸ், ஸ்மார்ட் வாட்சஸ், ஏர்பட்ஸ், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்களில் ஆஃபர்களை அள்ளி தெளித்துள்ளது பிளிப்கார்ட்..
கடந்த ஆண்டை போலவே பிளிப் கார் பிளஸ் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரம் ஹெட் ஸ்டார்ட் என்ற சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதே அது தொடங்கிவிட்டது. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் இணைந்து பல சலுகளை அளிக்க உள்ளது. அதாவது, பொருட்களை ஆர்டர் செய்யும் போதெ சலுகைகள் , இஎம்.ஐ சலுகைகள் ஆகியவற்றையை அளித்துள்ளது.
அதேபோல பில்லியன் டேஸ் விற்பனையின் போது, Apple, Samsung, Moto, Oppo, Xiaomi, Vivo போன்ற பிரபலமான பிராண்டுகளின் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் விலைகளில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி, கோடக், ஐசிஐசிஐ ஆகிய வங்கி மூலமாக வாங்கினால் 10 சதவீத டிஸ்கவுண்ட் செய்யப்படும் என விளம்பரம் வெளியிட்டுள்ளது. ஐபோன் 14 பிளஸ் போன்களை 60,999 முதல் வாங்கலாம் என்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. ஐபோன் 12 விலை 39,999 முதல் இருக்கும் என்று பிளிப்கார்ட் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
அதேபோல அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலும் இன்று தொடங்கியுள்ளது. பல்வேறு சிறப்பு சலுகைகளை அமேசானும் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்தான். அதிலும் கேட்ஜெட் போன்றவைகளில் ஆஃபர்களை அமேசானும் அள்ளி வீசியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications