பூரிக் கட்டையை சரியா வீசுறது பெரிசா?.. இல்லை தோசையை கரெக்ட்டா தட்டுல வீசறது பெரிசா?
மும்பை: தோசை வேண்டுமானால் நீங்கள் போய் வாங்க தேவையில்லை, உங்கள் தட்டுக்கே தோசை தானாக பறந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எந்த துறையாக இருந்தாலும் அதில் புதுமையை புகுத்தினால் அதில் நல்ல வளர்ச்சி இருக்கும். அது போல் ஹோட்டல் தொழில்களில் ருசி, சுகாதாரத்துடன் புதுமை என்பது மிகவும் முக்கியமானதொன்று.
எத்தனையோ தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி கடையில் பறக்கும் தோசையை சாப்பிட்டிருக்கீர்களா?

வைரல் வீடியோ
ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபிஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் ஒரு வீடியோ ஷேர் செய்யப்பட்டது. அதில் உங்கள் தட்டிற்கே தோசை பறந்து வருகிறது. இந்த பறக்கும் தோசை வீடியோவை 8 கோடியே 40 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர். மேலு்ம 13 லட்சம்பேர் லைக் போட்டுள்ளனர்.

மசால் தோசை
விறுவிறுப்பாக தோசை கல்லில் ஒரு இளைஞர் தோசை சுடுகிறார். அது ரெடியான பிறகு நேரடியாக வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார். அதிலும் அவர் அந்த வாடிக்கையாளர் எங்கிருக்கிறார் என பார்க்காமலேயே வீசுகிறார். தோசையும் சரியாக தட்டில் வந்து விழுகிறது. அரிசிமாவை அரைத்து தோசைக் கல்லில் மாவை ஊற்றி, அதில் வெங்காயம் சேர்த்தால் வெங்காய தோசை, மசாலா சேர்த்தால் மசாலா தோசை என பல வகைகளில் தோசையை மக்கள் கண்டுபிடித்து சாப்பிட்டு வருகிறார்கள்.

வாடிக்கையாளர்கள்
என்னதான் இருந்தாலும் இது உணவிற்கும் வாடிக்கையாளருக்கும் செய்யும் அவமரியாதை என நெட்டிசன்கள் சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ அட்டகாசமாக அந்த பையன் வாடிக்கையாளர்களுக்கு தோசை பரிமாற அதை வானில் பறக்க விடுகிறார் என பலர் பாராட்டுகிறார்கள்.

தோசை வீச்சு
இந்த செயல் அவமரியாதை செயலோடு காற்றில் தோசையை வீசுவதால் அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் தோசையின் மீது ஒட்டிக் கொள்ளும் என சிலர் கூறியுள்ளார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி ஏராளமானோர் அந்த இளைஞரை பாராட்டி வருகிறார்கள். மும்பைவாசிகள் இந்த ஹோட்டல் இருக்கும் முகவரியை கேட்டு வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications