பேசிட்டே இருக்கும்போது.. திடீர்னு சைகை காட்டிய அதிகாரி.. தண்ணீர் பாட்டிலுடன் ஓடிய நிர்மலா சீதாராமன்
தண்ணீர் கொடுத்த நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுக்ககள் குவிந்து வருகிறது
மும்பை: நிர்மலா சீதாராமனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.. இதற்கு ஏராளமானோர் திரண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
மும்பையில், கடந்த சனிக்கிழமை, என்எஸ்டிஎல்-இன் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்களுக்காக ஹிந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் NSDL இன் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியான 'மார்க்கெட் கா ஏக்லவ்யா' என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

மார்க்கெட்டிங்
பிறகு நிர்மலா சீதாராமன் பேசும்போது, "மார்க்கெட் கா ஏக்லவ்யா" மூலம், நிதி அறிவு தேவைப்படும் எத்தனையோ நபர்களை நீங்கள் சென்றடைய முடியும்... மார்க்கெட்டிங் பற்றியும், மாணவர்களுக்கு அதனை பயிற்றுவிப்பதன் மூலமும் என்எஸ்டிஎல் எடுத்துள்ள சரியான அணுகுமுறையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய சரியான நேரம் இது" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

மைக்கில் பேச்சு
இதையடுத்து, நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு மேடையில் பேச வந்தார்.. அப்போது நடந்த சம்பவம்தான் வீடியோவாக வைரலாகிறது. மைக்கில் பேசி கொண்டே வந்த பத்மஜா சுந்துருவுக்கு திடீரென தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது.. அதனால், தன்னுடைய பேச்சை நடுவில் நிறுத்திவிட்டு, குடிக்க தண்ணீர் வேண்டும் என்பது போல் சைகை செய்கிறார்... உடனே, மேடையில் இருந்து இதை கவனித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓடிசென்று பத்மஜா சுந்துருவுக்கு தண்ணீர் பாட்டிலை வழங்குகிறார்..

நெகிழ்ச்சி
தண்ணீர் வாங்கி குடித்த பின்னர், பத்மஜா சுந்துரு மிகவும் நெகிழ்ச்சி அடைந்துவிட்டார்.. நிர்மலா சீதாராமன்தான் தனக்கு தண்ணீர் கொண்டு வந்து தருவார் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.,. உடனே நெகிழ்ந்துபோய் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்கிறார்.. உடனே அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவருமே கைதட்டி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.. அந்த வீடியோவில் இந்த காட்சிகள்தான் அமைந்துள்ளன.

பாராட்டு
இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஷேர் செய்துள்ளார்... அத்துடன் நிர்மலா சீதாராமனை மனமார பாராட்டியும் உள்ளார்.. "நிர்மலா சீதாராமனின் பரந்த மனசு, அவரது பணிவு, அவர் பிறருக்கு அளிக்கும் மதிப்பு போன்றவைகளை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது என்று பாராட்டி உள்ளார்.. இவருடன் சேர்ந்து வீடியோ பார்த்த, இணையவாசிகளும் நிர்மலாவை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications