திடீர் உடல்நலக்குறைவு.. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
89 வயதான பிரதீபா பாட்டில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி வகித்திருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலையில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து நேற்று புனேவில் உள்ள பார்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் வேகமாக பரவ தொடங்கியிருந்தது. முதன் முதலாக மகாராஷ்டிராவின் 'ஜல்கான்' சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மாநில அமைச்சரவையில் அமைச்சராக சுகாதாரம், சுற்றுலா, நாடாளுமன்ற விவகாரங்கள், வீட்டுவசதி, சமூக நலம், கலாச்சாரம், பொது சுகாதாரம், சமூக நலம், மதுவிலக்கு மறுவாழ்வு, கல்வி அமைச்சர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
அதேபோல சட்டப்பேரவை தலைவராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்யசபா துணை சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்புகளிலிலிருந்து, எம்பி ஆகி பின்னர் இறுதியாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இனிமையான அணுகு முறைக்கு பெரியதாக அறியப்பட்ட பிரதீபா பாட்டில், ஓய்வுக்கு பின்னர் புனேவில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications