Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

85 கிலோ உடல் எடையை குறைத்த இன்ஸ்டா பிரபலம்.. அதுவும் சில மாதங்களில்..! இந்த 8 பாயிண்டுகள் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: உடல் பருமன் என்பது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், உடல் எடையைக் குறைப்பது ஒன்றும் அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை. இதற்கிடையே ஊட்டச்சத்து நிபுணரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான ப்ராஞ்சல் பாண்டே தான் எப்படி சில மாதங்களில் 85 கிலோ எடையைக் குறைத்தேன் என்பது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

உடல் பருமன் என்பது இப்போது நாம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. உடல் பருமன் என்பது உடலுக்குப் பலவித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் பருமனை குறைக்கப் பலரும் முயல்கிறார்கள்.

health weight loss

இருப்பினும், அது ரொம்பவே கடினமான வேலையாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மெதுவானமாற்றம் உள்ளவர்களுக்கு எடை குறைப்பது ரொம்பவே கடினம்.

உடல் எடை குறைப்பு:

இதன் காரணமாகவே பலருக்கும் எடை இழப்பு பயணங்கள் அவ்வளவு ஈஸியாக அமைவதில்லை. உடல் எடையை வெற்றிகரமாகக் குறைத்த அனைவரும் சொல்வது இதைத்தான். இதன் காரணமாகவே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று ஒர்க் அவுட்டை ஆரம்பிக்கும் பெரும்பாலானோரால் உடல் எடையை வெற்றிகரமாகக் குறைக்க முடிவதில்லை.

இதற்கிடையே ஊட்டச்சத்து நிபுணரும் இன்ஸ்டாகிராம் பிரபலமும் ஆன ப்ராஞ்சல் பாண்டே தான் எப்படி வெற்றிகரமாக உடல் எடையைக் குறைத்துள்ளார் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 150 கிலோ எடையில் இருந்த ப்ராஞ்சல் பாண்டே சில அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைத்து இப்போது 68 கிலோவுக்கு வந்துள்ளார். இந்த எடை குறைப்பு பயணத்தில் எதிர்கொண்டுள்ள சவால்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பிரபலம்

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்னால் ஒல்லியாக இருக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.. எப்போதும் எனது உடல் எடை 3 இலக்கில் தான் இருந்தது. இப்போது தான் 100க்கு கீழ் வந்துள்ளது. ரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் ஆகியவை சேர்ந்த இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஹெல்தியாக உணர்கிறேன். எனது உடல் எடையை 150 கிலோவில் இருந்து 68 கிலோவாக குறைத்துள்ளேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை.

8 பாயிண்ட்கள்:

எடை குறைப்பு என்பதை வெறுமன டயட் அல்லது ஒர்க் அவுட் மூலம் அடைய முடியாது. அதற்குத் தேவை வாழ்க்கை முறை மாற்றம்.

1) தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது வயிற்றில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது.. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

2) உங்கள் உணவில் நார்ச்சத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்தை அதிகம் சாப்பிடும் போது உங்கள் உடலின் இன்சுலின் அளவு பெரியளவில் உயராது.

3) புரதம் அல்லது கொழுப்பு உள்ள பழங்களைச் சாப்பிடுவது. இது அனைவருக்கும் தேவையில்லை.. ஆனால் எனக்கு PCOS பிரச்சினை இருப்பதால் எனக்கு அதிக பலன் தருகிறது.. உதாரணமாகப் பாதாம், வெண்ணெய்யுடன் ஆப்பிள், கிரேக்க யோகர்ட் மற்றும் பெர்ரி சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

4) உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள். தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றச் சிறுநீர் உதவும் என்பதால் நீரை அதிகளவில் குடியுங்கள்?

5) ஒவ்வொரு உணவிற்கும் பிறகு குறைந்தது 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். வாக்கிங் போகலாம்.. வாக்கிங் முடியவில்லை என்றால் 10-15 squats செய்யலாம்.

கடைசி உணவு:

6) தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவைச் சாப்பிடுங்கள்.

7) ஒவ்வொரு உணவிலும் புரதத்திற்கு முன்னுரிமை அளிப்பது. புரதத்தைச் சாப்பிடும் போது தான் வயிறு நிரம்பும். ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் தேவையில்லாமல் போகும். இதுவும் உடலுக்கு நல்லது.

8) தினசரி உடற்பயிற்சி. ஜிம், பைலேட்ஸ், வாக்கிங் அல்லது ரன்னிங் என தினமும் எதாவது ஒன்றைச் செய்யுங்கள். அதுவே உடலுக்கு நல்லது. ஆரோக்கியத்தைத் தரும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+