குட்டை ஆடை அணிந்து வந்த நடிகை.. கண்ணியத்தை காக்க மறைத்தபடி நின்ற சுஷாந்த்.. வைரல் வீடியோ
மும்பை: ஒரு படவிழாவில் சக நடிகையின் கண்ணியத்தை காக்க சுஷாந்த் சிங் ராஜ்புத் போராடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரும் ராஜ வம்சத்தை சேர்ந்தவருமான 34 வயதே ஆனவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் அகில இந்திய பொறியியல் தேர்வில் 7ஆவது இடம் பிடித்துள்ளார்.
அவர் தேசிய ஒலிம்பியாட்டில் இயற்பியல் பாடப்பிரிவில் வெற்றியும் பெற்றார். டோனிக்கான பயோபிக் படத்தில் நடித்தமைக்காக பாராட்டுதல்களை பெற்றார். படிப்பு, நடிப்பு, திறமை ஆகியவற்றை ஒரு சேர பெற்றுள்ளார்.

உறங்குவதற்கு முன்னர்
இவர் மும்பையில் உள்ள பாந்த்ரா வீட்டில் நேற்று இரவு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டிருந்தார். ஆனால் இதை எந்த நண்பரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மன அழுத்தம் காரணமாக மிகவும் லேட்டாக உறங்குவதற்கு சென்றார். மறுநாள் அவரது வீட்டு பணியாளர் வீட்டுக் கதவை தட்டினார்.

சுஷாந்தின் நண்பர்கள்
கதவு திறக்கப்படவில்லை. போன் போட்டும் பதில் இல்லை. இதனால் பதறிய அவர் சுஷாந்தின் நண்பர்களுக்கு போன் செய்தார். பின்னர் நண்பர்கள் வந்து போலீஸார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அங்கு தற்கொலைக்கான கடிதம் ஏதும் இல்லை.

வீடியோ
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது இறப்பால் பாலிவுட்டே சோகம் அடைந்துள்ளது. ட்விட்டரிலும் அவர் குறித்த நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

உடலை மறைத்து
அதில் ஒரு பட விழாவில் சுஷாந்த் அமர்ந்துள்ளார். அப்போது குட்டை உடை அணிந்த படி சக நடிகை வருகிறார். அந்த பள்ளமான நாற்காலியில் அவர் உட்கார்ந்தால் ஆபாசமாக இருக்கும். இதனால் அந்த நடிகையை உட்கார வைத்த சுஷாந்த் பார்வையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் யாரும் பார்க்காத வண்ணம் மறைத்து கொண்டு விழா ஏற்பாட்டாளர்களிடம் அந்த நடிகையின் உடலை மறைக்க டவல் போன்ற ஒரு துணியை கேட்கிறார்.
|
பிடித்தமானவர்
இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அவர் எத்தகைய மனிதத்தன்மை கொண்டவர் என்பது ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும். அத்தனை மதிக்கத்தக்க மனிதர். பாலிவுட்டில் உள்ள அனைவருக்கும் அவரை பிடிக்கும். இத்தகைய நற்குணங்களை கொண்ட சுஷாந்தின் ஆன்மா சாந்தி அடையட்டும் என ட்விட்டரில் பகிர்கிறார்கள் ரசிகர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications