பலாத்காரம் செய்ய போறாங்களா.. பயப்படாதீங்க.. "காண்டம்" பயன்படுத்துங்க.. டைரக்டரின் கேவலமான யோசனை!
பலாத்காரம் செய்வோர் ஆணுறைகள் பயன்படுத்த வேண்டும் என டைரக்டர் கூறுகிறார்
மும்பை: ஹைதராபாத்தில் நடந்த கொடூரமான பெண் டாக்டர் பாலியல் பலாத்கார சம்பவத்திற்குப் பிறகு சிலர் குரூரமான முறையில் கருத்துக்களைப் பதிவிடுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது. அந்த வகையில் ஒரு சினிமா டைரக்டர், பெண்கள் தங்களை யாராவது பலாத்காரம் செய்ய வந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முட்டாள்தனமான அறிவுரையைக் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் மிகவும் மோசமான முறையில் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டையே அதிர வைத்துள்ளது இந்த சம்பவம்.
இந்த நிலையில் ஒரு சினிமா இயக்குநர் முட்டாள்தனமான பதிவை தனது பேஸ்புக்கில் போட்டு பின்னர் நீக்கியுள்ளார். அவரது பெயர் டேனியல் ஷ்ராவன் என்பதாகும். இவர் போட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருந்தது இதுதான்:

பலாத்காரம்
"வன்முறை இல்லாத (அதாவது பலாத்காரத்திற்குப் பின்னர் கொலை செய்து) பாலியல் பலாத்காரத்தை அரசு சட்டப்பூர்வமானது என்று அங்கீகரிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுதத் வேண்டும். (அதாவது ஆண்களின் செக்ஸ் தேவைகளை நிராகரிக்கக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்)".

பின்லேடன்
அப்படி செய்தால்தான் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெறாது. வீரப்பனை கொன்று விட்டால் கடத்தல் நின்று விடும், பின்லேடனைக் கொன்று விட்டால் தீவிரவாதம் ஒழிந்து விடும் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். அதேபோலத்தான் நிர்பயா சட்டத்தை கொண்டு வந்தால் பாலியல் பலாத்காரத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பதும்.

ஆணுறைகள்
குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு செக்ஸ் கல்வி குறித்து விளக்கப்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எப்போதும் கையில் ஆணுறையை வைத்திருக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை அவர்களது பாலியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டால் அவர்கள் பெண்களைக் கொல்ல மாட்டார்கள்.

பேட்டி
எனவே பெண்கள்,தங்களை நாடி வரும் ஆண்களின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ய ஒத்துழைத்தால் கொலை போன்ற சம்பவங்களுக்கு வாய்ப்பே இல்லை" என்று அந்த இயக்குநர் போட்டிருந்தார். அவ்வளவுதான், பொங்கி எழுந்து விட்டது பேஸ்புக் உலகமே!! டேணியலை சும்மா கிழி கிழி என்று கிழித்தெடுத்து விட்டனர் அவரது முட்டாள்தனமான யோசனைகளுக்காக. இதை எதிர்பாராத டேணியல் தற்போது அந்த போஸ்ட்டை எடுத்து விட்டார்.
என்னதான் ஜென்மங்களோ இவர்கள் எல்லாம்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications