பிரதமரை பேட்டி எடுத்த நீங்களே கேளுங்க.. அக்சய் குமாரை இழுத்து பாஜகவை கலாய்த்த காங்கிரஸ்!
மும்பை: சாதாரண ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவி சாய்க்கவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து நீங்கள் ட்வீட் செய்ய வேண்டும் என்று அக்ஷய் குமாருக்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களை இயக்குவதில்தான் ரயில்வே நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாகவும் சாதாரண மக்கள் பயன்படுத்தப்படக் கூடிய ரயில்களை போதிய எண்ணிக்கையில் இயக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் ஏசி பெட்டிகளில் கூட முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறும் சம்பவங்கள் நடப்பதாகவும் இதற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்காததே காரணம் என்ற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக வந்தே பாரத் ரயில்களில் போதிய அளவு பயணிகள் ஏறுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் கேரள காங்கிரஸ் அண்மையில் முன்வைத்தது.
இதற்கு ரயில்வே தூறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கேரள காங்கிரஸ் இந்த விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்து மத்திய அரசை சாடியுள்ளது. அதிலும் நடிகர் அக்ஷய் குமாரை சீண்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாது:-
உங்களிடம் இருந்து எங்களுக்கு சிறிய உதவி தேவைப்படுகிறது. கோடிக்கணக்கான சாதாரண பயணிகள் இப்படி ரயிலில் நெரிசலில் பயணிக்க வேண்டியுள்ளது. விதர்பா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பல வந்தே பாரத் ரயில்கள் காலியாக இயங்குகின்றன. வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டில் விலை சாதாரண மக்களின் சம்பளத்தை விட அதிகமாக இருப்பதால் சாதாரண குடிமக்களால் அதில் செல்ல முடியவில்லை.
பெருவாரியான மக்கள் பயன்படுத்தக் கூடிய சாதாரண ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவி சாய்க்கவில்லை. வசதி படைத்தவர்களும் பிரபலங்களும் கூறினால் உடனடியாக அவர் பதிலளிப்பதை நாங்கள் கவனித்தோம். நீங்கள் (அக்ஷய்குமார்) நாடு மீது கொண்டிருக்கும் நேசம் எங்களை வியக்க வைத்து இருக்கிறது.
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, டிராபிக் ரூல்ஸ் விளம்பரங்கள் என உங்களின் பங்களிப்பு ஊக்கமளிக்கும் விதமாக இருந்தது. அதுமட்டும் இன்றி மிகவும் கடினமான கேள்விகளை மோடியிடம் கேட்க கூடிய ஒரே பிரபலம் நீங்கள்தான். ஆனந்த் மகிந்திரா, அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களை நாங்கள் அணுகினோம்.
ஆனால் யாரும் உதவ வில்லை. எனவே கடைசியாக உங்களிடம் வந்து இருக்கிறோம். உங்கள் தேசபக்தி, செல்வாக்கு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை சமூக விஷயங்களில் கொடுத்து, இந்த விவகாரம் குறித்து நீங்கள் ட்வீட் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications