கூகுள் ஊழியர்களுக்கு தினமும் இவ்வளவு சாப்பாடா.. டெம்ப்டாக்கிய வீடியோ
மும்பை: இந்த பொறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சுது என்பதுபோல கூகுள் ஊழியர் ஒருவர் தங்களது ஆபிஸ் கேன்டீனில் தினமும் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுவார் என்று வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது. கூகுள் ஆபிஸ் கேன்டீனில் ஊழியர்களுக்கு இத்தனை உணவுகள் வழங்கப்படுகின்றனவா என்ற ஆச்சரியத்தையும் அந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் ஊழியர், பர்லீன் ரன்ஹோத்ரா என்பவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், "கூகுள் ஊழியராக நான் தினமும் என்ன சாப்பிடுவேன் என்று தெரியுமா?" என்கிற கேப்சனுடன் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அந்த வீடியோவில் பர்வீன், முதலில் ஒரு ட்ரே எடுக்கிறார். பிறகு அதில் தட்டு, ஸ்பூன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு மதிய உணவுக்கு தயாராகிறார். "என்னுடைய மேனேஜர் மற்றும் பாஸ் முன்பு இந்த வீடியோ எடுக்க சற்று பயமாகத்தான் உள்ளது. இருந்தாலும் உங்களுக்காக வீடியோ எடுக்கிறேன்." என்று சொல்லிவிட்டு நேராக உணவுகளை அடுக்கத் தொடங்குகிறார்.

முதலாவதாக 'ரமேன்' எனப்படும் ஜப்பான் வகை நூடுல்ஸ் மற்றும் வெள்ளரிக்காய் சாலட்களை எடுத்து வைக்கிறார். தொடர்ந்து தந்தூரி, புரோட்டா, மட்டன் கெபாப், க்ரீன் சட்னி ஆகியவற்றை அடுக்க தட்டு ஹவுஸ்புல் ஆகிவிடுகிறது. மேலும் அருகில் ப்ரிட்ஜில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டின் கோக்கையும் எடுத்து ஒரு பிடி பிடிக்கிறார். டெஸர்ட்டுக்கு பாட்டிலில் வைத்திருந்த ஒரு டிஷ் பிடிக்காமல், அருகில் இருந்த டார்க் சாக்லெட் ஐஸ் க்ரீமுடன் தன் லஞ்ச்சை முடிக்கிறார். "அவ்ளோதான் முடிஞ்சு. எனக்கு இதுக்கப்பறம் 3 மீட்டிங் இருக்கு. வரட்டா..." என்று சொல்லி வீடியோவுக்கு எண்ட் கார்டு போடுகிறார் பர்வீன்.
இந்த வீடியோ 3 மில்லியன் வியூஸ்களுடன் இன்ஸ்டாவில் முரட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில் கமென்ட் செய்துள்ள பலரும், "இதுக்காகவே எப்படியாச்சும் கூகுளில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும். நான் கூகுளில் பணியாற்ற தயாராக உள்ளேன். எப்போது இன்டர்வியூ என்று சொல்லுங்கள். ஒரு சிக் லீவ் கூட எடுக்காமல் பணியாற்றுவேன்." என்றும் நக்கலாக கூறியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications