அரசு பஸ்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளி குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு
மும்பை: மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பஸ் ஸ்டாண்டின் சம்பவத்தின் கொதிப்பு இன்னமும் அடங்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளியை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருக்கிறது. எனினும், இந்த புனே சம்பவத்தினால், அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நேற்றுமுன்தினம், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பஸ் ஸ்டாண்டுக்கு 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அதிகாலையில் வந்துள்ளார். சதாரா மாவட்டத்திலுள்ள, தன்னுடைய சொந்த ஊரான பால்டானுக்கு செல்வதற்காக, பஸ்ஸூக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் பெண்ணிடம் , சிஸ்டர் என்று கூப்பிட்டு மெல்ல பேச்சு தந்தார்.. சதாராவுக்கான பஸ், வேறொரு நிறுத்தத்தில் உள்ளது என்று கூறி, பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காலியான ஏசி பஸ்ஸிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றார்.
அணைக்கப்பட்ட விளக்குகள்
விடிகாலை நேரம் என்பதால் பஸ்ஸில் விளக்குகள் எதுவும் எரியவில்லை. பஸ்ஸில் விளக்கு இல்லையே என்று அந்த பெண் கேட்க, பயணிகள் எல்லாரும் தூங்கி கொண்டிருப்பதால் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.. பிறகு அந்த பெண் பஸ்ஸில் ஏறியதும், அந்த போதை நபரும் பின்னாடியே ஏறிக்கொண்டு, பஸ் கதவை அடைத்துவிட்டார்.
ஏசி பஸ் என்பதால் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன. பிறகு அந்த பெண்ணை பஸ்ஸில் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டார்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், போலீசில் இதுகுறித்து புகார் சொல்லவும், காவல்துறை விரைந்து வந்துள்ளது..
தலைமறைவு குற்றவாளி
பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் அந்த நபரின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் (36 வயது) என்பதும் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவர் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து துணை காவல் ஆணையர்(டி.சி.பி.) ஸ்மார்த்தா பாட்டீல் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்டவருடன் அந்தப் பெண் பேருந்தை நோக்கி நடந்து செல்வது பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் ஏராளமான மக்களும், ஏராளமான பேருந்துகளும் இருந்தன. இப்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது.. தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
சன்மானம் வழங்கப்படும்
இந்நிலையில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளியை கண்டுபிடிக்க 13 காவல் குழுக்கள் பணியாற்றி வருவதாகவும், கடே பற்றிய தகவல்களை 020-24442769 அல்லது 9881670659 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications