ஆனந்த் அம்பானி திருமணம்.. வேற லெவலில் ஏற்பாடுகள்.. விருந்தினர்களுக்கு கொடுக்கப்படும் விஷேச ‘கிப்ட்’
மும்பை: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை அம்பானி குடும்பத்தினர் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் பல்வேறு தொழில் சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வரும் நிறுவனம் ரிலையன்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவருடைய தந்தை திருபாய் அம்பானியை விட தனது நிறுவனத்தை பல மடங்கு பெரிதாக்கியிருக்கிறார் முகேஷ். இவர் தற்போது உலக பணக்காரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

திருபாய் அம்பானி அப்போது இருந்த வசதிக்கு அவருடைய மகனுக்கு (முகேஷ் அம்பானி) பணக்காரர்கள் பெண் கொடுக்க காத்திருந்திருப்பர். ஆனால் திருபாய் அம்பானியோ தனக்கு பணம் பெரிதல்ல என கருதியதோடு நல்ல குணாதியசம் கொண்ட நீடா அம்பானியை திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
நீடா அம்பானி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர். மேலும் அவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவருடைய பரத நாட்டிய நிகழ்ச்சியில்தான் தனது மகனுக்கு ஏற்ற ஜோடி நீடாதான் என முடிவு செய்தார் திருபாய். இதையடுத்து திருபாய் அம்பானி, நீடாவின் தந்தையிடம் பெண் கேட்டு சென்றார். எனினும் நான் அந்த பெண்ணுடன் பேசி பழக வேண்டும் என முடிவு செய்த முகேஷ் அம்பானி, எனக்கு அந்த பெண்ணையும் அந்த பெண்ணுக்கு என்னையும் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
அதன்படி ஒரு நாள் காரில் நீடாவை அழைத்துக் கொண்டு ஒரு டிரைவ் போனார் முகேஷ். இருவரும் மனம் விட்டு பேசியதில் இருவருக்குமே பிடித்து போய்விட்டது பின்னர்தான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய இரு மகன்களும், இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானிக்கு வைர வியாபாரியின் மகள் ஸ்லோகாவை திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அது போல் ஈஷாவுக்கு திருமணமாகிவிட்டது. அவருக்கும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
திருமணம் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு திருமணம் என்றால் சும்மாவா.. திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருமண விழாவில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு பிரத்யேக மெழுகுவர்த்தி ஒன்றை பரிசளிக்க அம்பானி குடும்பம் திட்டமிட்டுள்ளது.
இந்த மெழுகுவர்த்தியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மகாபலேஸ்வரில் உள்ள பார்வை இல்லா மாற்றுத்திறனாளிகள் இதை தயாரிக்கிறார்கள். இந்தியாவின் பாரம்பரிய கலைஞர்களையும் கைவினை கலைஞர்களையும் கவுரப்படுத்தும் விதமாகவும் கலைகளை பாதுகாக்கும் விதமாகவும் இது அமைய உள்ளது.












Click it and Unblock the Notifications