Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருட்டு பசங்களுக்கு இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.. நெல்லை தம்பதியை பாராட்டிய ஹர்பஜன் சிங்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருடர்களுடன் ராத்திரியில் தீரமான போராட்டம் செய்து அடித்து துரத்திய தம்பதி-வீடியோ

    மும்பை: நெல்லை மாவட்டம் கடையத்தில் கொள்ளை கும்பலை தாக்கிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் வீரத்தம்பதியை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தை சேர்ந்தவர்கள் செந்தாமரை, சண்முகவேல். மகன்கள் வெளியூரில் பணியாற்றி வருவதால் முதியவர்களான இந்த தம்பதி மட்டும் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இவர்களது வீட்டில் இரு கொள்ளையர்கள் நுழைந்தனர். அப்போது சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினர். இவரது அலறல் சப்தம் கேட்டு செந்தாமரை ஓடி வந்தார்.

    சண்முகவேல்

    சண்முகவேல்

    கணவரை காப்பாற்ற சென்ற போது கொள்ளையர்கள் அரிவாளை காண்பித்து மிரட்டினர். இதையடுத்து அதற்கெல்லாம் அஞ்சாத செந்தாமரை செருப்புகளை கொண்டும், நாற்காலிகளை கொண்டும் வீசினார். இதனால் சண்முகவேல் மீதான பிடி விலகியது.

    சிகிச்சை

    சிகிச்சை

    பின்னர் இருவரும் சேர்ந்து திருடர்களை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் செந்தாமரையை தாக்கிவிட்டு இருவரும் தப்பிவிட்டனர். இதையடுத்து காயமடைந்த செந்தாமரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    ஊர்மக்கள்

    ஊர்மக்கள்

    இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் செந்தாமரை மட்டும் வராதிருந்தால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என ஊர்மக்கள் கூறுகின்றனர்.

    ஹர்பஜன் சிங்

    ஹர்பஜன் சிங்

    இந்த வீரத்தம்பதிக்கு நெல்லை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் நேரில் சென்று இருவரையும் பாராட்டினர். இந்த நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

    பஜ்ஜி பாராட்டு


    இதுகுறித்து அவர் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலின்னு சொல்ற மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் #நேர்கொண்டபார்வை
    Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers என தெரிவித்துள்ளார் பஜ்ஜி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+