மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோசமான தலைவரை கொண்டிருப்பது மகாராஷ்டிராவின் தவறு அல்ல.. உத்தவ் மீது பட்னாவிஸ் மனைவி கடும் தாக்கு

Google Oneindia Tamil News

மும்பை: அண்மைக்காலமாக சிவசேனாவுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ், ஒரு மோசமான தலைவரைக் கொண்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தின் தவறு அல்ல, "ஆனால் ஒருவரை மட்டும் நம்புவது தவறு" என்று தெரிவித்துள்ளார்.

இந்துத்துவா சித்தாந்தவாதியான வி டி சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக பேசியதை கண்டித்து அம்ருதாவின் கணவர் பட்னாவிஸ் ட்வீட் செய்து பதிலடி கொடுத்தார். அப்போது மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் பட்னாவிஸ் விமர்சித்தார்.

Having a bad leader was not Maharashtras fault: Amruta Fadnavis

அவர் விமர்சனம் செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு பட்னாவிஸ்சின் மனைவி அம்ருதா தன்னுடைய டுவிட்டரில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அதில் "ஒரு மோசமான தலைவரைக் கொண்டிருப்பது மகாராஷ்டிராவின் தவறு அல்ல-ஆனால் ஒருவருரை மட்டும் நம்பது தவறு " என கூறினார். அவர் தனது ட்வீட்டை "ஜாகோ மகாராஷ்டிரா" (மகாராஷ்டிராவை எழுப்புங்கள்) என்ற வார்த்தைகளுடன் முடித்துள்ளார்.

சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்... அசோக் கெலாட் கடும் தாக்கு சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்... அசோக் கெலாட் கடும் தாக்கு

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு, மும்பையின் ஒரு பகுதியான தானே மாநகராட்சியில் பணியாற்றுவோரின் சம்பள கணக்கை அம்ருதா பட்னாவிஸ் உயர் அதிகாரியாக பணியாற்றும் ஆக்சிஸ் வங்கியில் இருந்து, தேசியமயமாக்கப்பபட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இதே போல் மகாராஷ்டிரா போலீசாருக்கான சம்பள கணக்கையும் ஆக்சிஸ் வங்கி இழக்கப்போகிறது. சிவசேனா கூடடணி அரசு 11 ஆயிரம் கோடி ரூபாய்மதிப்புள்ள சம்பள கணக்குகளை அரசின் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

English summary
Having bad leader not Maharashtra's fault, staying with one is: Amruta Fadnavis
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X