சுஷாந்த்சிங் தற்கொலை செய்யவில்லை.. யாரோ கொன்றுவிட்டார்கள்.. சந்தேகம் எழுப்பும் சொந்த தாய்மாமா!
மும்பை: நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்யவில்லை, அவரை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று அவரின் சொந்த தாய்மாமா தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரணம் இந்தியாவை உலுக்கி உள்ளது. தோனியின் வாழ்க்கை வரலாறு படம் தொடங்கி பல படங்களில் நடித்து இவர் இந்தியா முழுக்க பிரபலம் ஆனார். இந்த நிலையில் வெறும் 35 வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.
அவரின் தற்கொலை சினிமா உலகை புரட்டி போட்டுள்ளது. பிரதமர் மோடி, சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் சுஷாந்த்சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

காரணம்
சுஷாந்த்சிங் தற்கொலைக்கு இதுவரை முழுமையான காரணம் என்ன என்று தெரியவில்லை. சுஷாந்த்சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். சுஷாந்த்சிங் சிகிச்சை பெற்று வந்த மன நல மருத்துவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

எந்த பிரச்சனையும் இல்லை
மன அழுத்தம் தவிர சுஷாந்த்சிங்கிற்கு பிரச்சனை எதுவும் இல்லை. அவரின் படங்கள் சில வெளியாக காத்து இருக்கிறது. இன்னும் சில படங்களுக்கு கூட அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவருக்கு பொருளாதார ரீதியாகவும் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. ஆனாலும் கூட இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் இவரின் தற்கொலை பெரிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

உறவினர் சந்தேகம்
இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் தாய்மாமா தற்போது இது தொடர்பாக புதிய சந்தேகம் எழுப்பி உள்ளார். சுஷாந்த்சிங் தாய்மாமா என்ஏஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சுஷாந்த்சிங் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு இல்லை. அவர் அப்படிப்பட்ட நபர் இல்லை. இதை உடனே விசாரிக்க வேண்டும். அவரின் மரணத்திற்கு பின் பெரிய மர்மம் இருக்கிறது.
|
கொலைதான்
அவரை யாரோ கொலை செய்து விட்டார்கள். இதை போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்று சுஷாந்த்சிங் தாய்மாமா கூறியுள்ளார். அதேபோல் அவரின் ரசிகர்கள் மற்றும் ஜன அதிகார் என்று கட்சியை சேர்ந்த நபர்கள் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதற்கு பின் வேறு சில விஷயங்கள் நடந்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் போலீஸ்
ஆனால் போலீசார் இப்படி சந்தேகம் எதுவும் கொள்ளவில்லை. சுஷாந்த்சிங் தற்கொலை செய்த இடத்தில் சந்தேகத்திற்கு உரிய விஷயம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் தற்கொலை கடிதம் எழுதவில்லை. அதே சமயம் அவரை பலவந்தப்படுத்திய அடையாளம் எதுவும் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர். இதனால் சுஷாந்த்சிங் மரணம் குறித்த சர்ச்சைகளும், சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications