ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்! மணமகள் அணிந்திருந்த ஆடையின் சிறப்புகள் என்ன?
மும்பை: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் மணப்பெண் அணிந்திருந்த ஆடையின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா? கடந்த ஆண்டு முதல் இந்த திருமண வைபவங்கள் கோலாகலமாக நடந்து வந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு அவர்களுடைய திருமண நிகழ்வுகள் நடக்கின்றன.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்து நிறுவன அதிபர் வீரேன்- ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த திருமண நிகழ்வுக்கு ரூ 5000 கோடி வரை செலவிடப்பட்டதாக தெரிகிறது. அதாவது முகேஷ் அம்பானியின் சொத்தில் 0.5 சதவீதம் செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்படமுக்கிய இந்திய அரசியல் தலைவர்களுக்கும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி,மாலத்தீவு உட்பட உலக நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திருமணத்தில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜி மும்பைக்கு வந்தடைந்தார். திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரகுமான், கிரிக்கெட் வீரர் தோனி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, பாடகர்கள் அடில் லானா டெல் ரே, டிரேக், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான பி.கே.சியில் உள்ள ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் நடந்தது. மணமகன் ஆனந்த் அம்பானி சிவப்பு, தங்க நிறத்தில் ஷெர்வானி அணிந்திரு்தார். மணமகள், மணமகன் மட்டுமல்லாமல் விருந்தினர்களும் கண் கவர் ஆடம்பர உடைகளை அணிந்திருந்தனர்.
பிரதமர் மோடி இன்று நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக பி.கே.சி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் உடை குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
ராதிகா, அபு ஜானி சந்தீப் கோஸ்லா டிசைன் செய்த ஆடையை தனது திருமண விழாவில் அணிந்திருந்தார். அவருடைய பனேட்டர் எனப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகள் அந்த ஆடையில் வெளிப்பட்டது. மணப்பெண்கள் சிவப்பு, வெள்ளை நிறத்தில் திருமண ஆடை அணிவது பாரம்பரியமாகும். அவர் தலையில் அணிந்திருந்த 5 மீட்டர் நீளமுள்ள முக்காடு, அவர் தோளில் அணிந்திருந்த டிஷ்யூவால் ஆன துப்பட்டா, அதிலிருந்த சிவப்பு நிற வேலைப்பாடுகள் அவர் ஆடையின் அழகை மெருகேற்றியது.
அவர் உடையில் இருக்கும் சிவப்பு பார்டர்கள் ஆடையின் அழகை அள்ளிக் கொடுத்தது. ஆடையின் வேலைப்பாடுகளில் நக்ஷி, சாடி, ஜர்தோஷி உள்ளிட்டவை இருந்தன. கையால் எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட நுணுக்கமான மலர் வடிவ டிசைன் கொண்ட செருப்பை அணிந்திருந்தார்.
அது போல் தம்பா நெத்திச்சூட்டி மற்றும் சிவப்பு நிற பட்டாடை அணிந்திருந்தார். அவர் தலையில் அணிந்திருந்த முக்காடு மென்மையான ஜாலி, கட் வொர்க் வேலைப்பாடுகளை கொண்டது. 80 அங்குலம் நீளம் கொ்ட ஜர்தோஷி வேலை செய்யப்பட்ட துப்பட்டாவையும் அவர் அணிந்திருந்தார். ராதிகா தனது உடைக்கு ஏற்றவாறு சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். போட்டோஷூட்டில் ஒரு மயிலும் இருந்தது. ராதிகாவின் உடை கோடிக்கணக்கான மதிப்பில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications