குட் நியூஸ்! வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைகிறது.. ஈ.எம்.ஐ. குறைந்து பணம் பாக்கெட்டில் சேரும்
மும்பை: ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் குறைத்துள்ளதால், வீடு மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வாகன உற்பத்தி மீண்டும் சூடு பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவின் நம்பர் 1 கார் உற்பத்தியாளர் மாருதி சுசுகியே வரலாறு காணாத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ரெப்போ விகிதத்தில் 35 சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது, பொருளாதார வல்லுநர்களின் பார்வையில், நல்ல முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு பலன்
ரெப்போ விகிதம் என்பது வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி வீதமாகும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கும்போது, குறைந்த செலவில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது. எனவே இந்த பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடத்திச் செல்லும் என்பதுதான் வாடிக்கையாளர்களுக்கான நன்மை.

மேலும் குறையும் வட்டி
ரெப்போ விகிதக் குறைப்பு ரியல் எஸ்டேட் துறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டுக் கடன்களை நாடுபவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பது இதற்கான காரணம். வங்கிகளுக்கான நிதி செலவு குறைந்து வருவதால், கடன் வட்டி விகிதம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே கடன் வாங்கியுள்ள மற்றும் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும். ஏனெனில் அவர்களின் ஈ.எம்.ஐ குறைவாக மாறும். வட்டி சுமையும் குறையும்.

வங்கிகள் கையில் முடிவு
அதேநேரம், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைப்பதால் ஏற்படும் நன்மையை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கொண்டு சென்று சேர்ப்பதை பொறுத்துதான் இது அமையும். ஏனெனில், கடந்த காலத்தில், வங்கிகள் கால தாமதத்துடன்தான் வட்டி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்தன. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்கும் போது உடனே வட்டியை கூட்டிவிடுவது வங்கிகள் வழக்கமாக இருந்தது.

இதுதான் உதாரணம்
ஒரு உதாரணத்தை பார்க்கலாம். 9 சதவீத விகிதத்தில் ஒருவர் வீட்டுக் கடனை, 15 ஆண்டுகாலத்திற்கு வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். ரூ .1 லட்சம் கடனுக்கான ஈ.எம்.ஐ ரூ .1,014 ஆக இருக்கும். வட்டி 1 சதவீதம் குறைக்கப்பட்டால், ஈ.எம்.ஐ ரூ .956 ஆக மாறுகிறது, சுமார் 6 சதவீத குறைவாகும்.
அப்படியானால், மொத்த கடன் தொகை ரூ .30 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள். வட்டி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டால், மாதம் 1758 ரூபாய் மிச்சமாகும்.
-
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications