Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டோவில் யாருன்னு பார்த்தீங்களா? தலை, கால் வெளியே நீண்டு.. ரோட்டில் பறந்த குதிரை.. முழித்த மும்பை

Subscribe to Oneindia Tamil

மும்பை : இணையத்தில் குதிரை ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்ததுமே பதறிப்போன நெட்டிசன்கள் கடுமையான ஆதங்கத்தையும், கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன நடந்தது மகாராஷ்டிராவில்?

மோகனூர் : மஹாராஷ்டிராவில் நடந்த கண்காட்சியில், மோகனூர் குதிரையை ₹1 கோடிக்கு அம்பானி குரூப்ஸ் விலைக்கு கேட்டனர். ஆனால், குதிரையை வளர்த்தவர் விற்க மறுத்துள்ளார்

horse auto maharashtra

குதிரை கண்காட்சி: வழக்கமாக மகாராஷ்டிராவில் குதிரை கண்காட்சி நடைபெறும்.. அந்தவகையில், சில தினங்களுக்கு முன்புகூட, மகாராஷ்டிராவில் குதிரை கண்காட்சி நடைபெற்றது.. இந்த குதிரை கண்காட்சி பற்றின தகவல் ஒன்று தமிழகத்திலும் வட்டமடித்தது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்துள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வீரா வரதராஜன்.. 43 வயதாகிறது.. விவசாயியான இவர் குதிரை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.. அந்தவகையில், மார்வாடி குதிரையையும் வீரா வளர்த்து வருகிறார்.. அம்பானி குரூப்பை சேர்ந்தவர்கள், இந்த குதிரையை ரூ.1 கோடிக்கு விலைக்கு கேட்டார்களாம்.. ஆனால், ஆசையாக வளர்த்த குதிரையை விலைக்கு தரமுடியாது என்று வரதராஜன் கறாராக சொல்லிவிட்டாராம்.

முதல் பரிசு: இந்த குதிரையை, மகாராஷ்டிரா குதிரை கண்காட்சிக்கும் அழைத்து சென்றார் வீரா.. இந்த குதிரையின் காது, கழுத்து, உடல் அழகு, கால் அழகு போன்றவற்றில் முதல் பரிசை பெற்றிருக்கிறது.. அப்போது இந்த குதிரையின் அழகை பார்த்து மகாராஷ்டிராவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குதிரையுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்கள்.. இந்த போட்டோக்கள் இன்னமும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில், இதே மகாராஷ்டிராவில் குதிரை வீடியோ ஒன்று வெளியாகி இணையவாசிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. அந்த வீடியோவில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில், ஒரு ஆட்டோவிற்குள் ஒரு குதிரையை கடத்தி செல்வது பதிவாகியிருக்கிறது.

கருப்பு கலர் ஆட்டோ: கருப்பு கலர் ஆட்டோவில் குதிரையை ஏற்றியிருக்கிறார்கள்.. ஆனால், முழுமையாக அந்த ஆட்டோவுக்குள் குதிரையின் உடல் செல்லவில்லை.. தலை ஒருபுறமும், கால்கள் மறுபுறமும் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது.. அவ்வளவு உயரமான குதிரை, இந்த சின்ன ஆட்டோவுக்குள் குறுகி, மடிந்து, குனிந்து, மண்டியிட்டு கிடக்கிறது.. இந்த ஆட்டோவை யாராவது வழியில் நிறுத்தினார்களா? குதிரையை மீட்டார்களா? அல்லது அப்படியே கடத்தி கொண்டு போய்விட்டார்களா? தெரியவில்லை.

ஆட்டோவில் குதிரையை ஏற்றி கொண்டுசெல்லும் வீடியோவை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர் குதால்கர் என்பவர் வீடியோவாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார்... குதிரை மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்டு, ஆட்டோவின் தலை மற்றும் பின்புறம் வெளியே இருந்து, பரபரப்பான சாலையில் வேகமாக செல்வது அந்த வீடியோவில் உள்ளதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கண்டனங்களை தெரிவித்தனர்..

நடவடிக்கை: இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் உடனடியாக குதிரையின் உரிமையாளர் மற்றும் ஆட்டோவின் விவரங்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+