ஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ராஜ்குந்த்ரா.. சீக்ரெட் ஆபரேஷனில் சிக்கியது எப்படி?
மும்பை: ஆபாச படம் எடுத்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை மலாடு பகுதியில் ஒரு சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படம் எடுத்து கொண்டிருந்த யாஸ்மின் ரோவா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகை வந்தனா திவாரியும் கைது செய்யப்பட்டார்.
இந்த கும்பல் சினிமா பட வாய்ப்புகளை தேடி அலையும் மாடல்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்தது விசாரணையில் அம்பலமானது.

போலீஸார் வழக்குப் பதிவு
இதையடுத்து கைதானவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஆபாச படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ 36 லட்சத்தையும் முடக்கினர். இந்த நிலையில் இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் தொடர்பிருப்பதை போலீஸார் அறிந்தனர்.

ராஜ்குந்த்ரா கைது
இதையடுத்து நேற்று முன் தினம் நள்ளிரவு ராஜ்குந்த்ராவை கைது செய்தனர். இவர்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்றும், இதற்கு போதிய ஆதாரம் இருப்பதையும் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததிருந்தனர்.

சொந்த செயலி
ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை அவருக்கு சொந்தமான ஹாட்சாட்ஸ் என்ற செயலி மூலம் பதிவேற்றம் செய்து , அதை பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கான அளவில் சந்தா தொகை பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் செயலியை பிரதீப் கென்ரிவின் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

செயலியில் பதிவேற்றம்
ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ததன் மூலம் கொள்ளை பணம் சம்பாதித்தது அவரது வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. ஆனால் ராஜ்குந்த்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிப்ரவரி மாதமே ராஜ் குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த விசாரணையும் இன்றி திடீரென கைது செய்தது சரியல்ல என தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications