"ஓவர் ஸ்பீட்.!" தப்பான திசையில் பாய்ந்த கார்.. சைரஸ் மிஸ்திரி விபத்தில் சிக்கியது எப்படி? பரபர தகவல்
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் சைரஸ் மிஸ்திரி. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பிறந்து வளர்ந்த அவர், அயர்லாந்து நாட்டின் முக்கிய கட்டுமான தொழிலதிபராக உள்ளார்.
இவர் கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவர். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் அவர் 2016இல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சைரஸ் மிஸ்திரி
மாகராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் அவர் பயணித்த கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு நபரும் உயிரிழந்தார். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.

ஓவர் ஸ்பீட்
சைரஸ் மிஸ்திரி அந்த காரை ஓட்டவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மும்பையில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர் ஒருவர் தான், விபத்திற்குள்ளான காரை ஓட்டி வந்துள்ளார். மேலும், கார் அந்த சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் வேகமாகச் சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும், தவறான பக்கத்திலிருந்து (இடதுபுறத்தில் இருந்து) மற்றொரு வாகனத்தை ஓவர்டேக் செய்யும் போது விபத்து நடந்துள்ளது.

மொத்தம் 4 பேர்
மும்பையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் அனாஹிதா பண்டோல் (55) என்பவர் தான் இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் கணவர் டேரியஸ் பண்டோல் (60), டேரியஸின் சகோதரர் ஜஹாங்கீர் பண்டோல் மற்றும் மிஸ்திரி பயணித்து உள்ளனர். இதில் ஜஹாங்கீர் பண்டோல் மற்றும் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அனாஹிதா பண்டோல் மற்றும் டேரியஸ் பண்டோல் காயங்களுடன் தப்பினர்.

எங்கே
இந்த விபத்து இன்று மாலை சுமார் 3 மணி அளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. மும்பையில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த மிஸ்திரியும் ஜஹாங்கீரும் பின் இருக்கையில் அமர்ந்து உள்ளனர். அனாஹிதா பண்டோல் வாகனத்தை ஓட்டிய நிலையில், அவரது கணவரும் முன்னால் உட்கார்ந்து உள்ளனர்.

நேரில் பார்த்தவர்
விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், "ஒரு பெண் காரை ஓட்டினார். அவர் இடதுபுறத்தில் இருந்து மற்றொரு வாகனத்தை முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. நாங்கள் உடனடியாக அங்குச் சென்றோம். 10 நிமிடங்களில் உதவி வந்தது. முதலில் காயமடைந்த இருவர், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications