ஐபிஎல்.. மும்பை ‛பிளேஆப்’ செல்லுமா? இன்று குஜராத்தை, ஆர்சிபி வென்றாலும் வாய்ப்பு இருக்காமே! எப்படி?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல்லில் ‛பிளேஆப்' சுற்றுக்குள் 4வது அணியாக நுழைய மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி உள்ளது. இதில் எந்த அணி ‛பிளேஆப்' செல்லும் என்பது இரவில் தெரிந்துவிடும் என்ற நிலையில் இன்றைய 2வது போட்டியில் குஜராத்தை, பெங்களூர் அணி வென்றாலும் கூட மும்பை அணிக்கு ‛பிளேஆப்' சான்ஸ் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து 23ம் தேதி முதல் ‛பிளேஆப்' போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த ‛பிளேஆப்' சுற்றுக்கு மொத்தம் 4 அணிகள் தகுதி பெறும். தற்போது வரை 3 அணிகள் அந்த சுற்றுக்குள் நுழைந்துவிட்டன.

How Mumbai Indians will enter as 4th team for playoff even if RCB Beat Gujrat Titans?

அதாவது குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ அணிகள் ‛பிளேஆப்' போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. ‛பிளேஆப்' சுற்றுக்கு 4வது அணியாக செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 3 அணிகளும் 14 புள்ளிகளை பெற்றுள்ளன.

இதனால் தான் இந்த அணிகளின் ‛பிளேஆப்' கனவை இன்று நடக்கும் 2 போட்டிகள் நிர்ணயம் செய்கின்றன. இருப்பினும் கூட தற்போதைய சூழலில் 4வது அணியாக ‛பிளேஆப்' செல்ல பெங்களூர், மும்பை, ராஜஸ்தான் என 3 அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக ரன்ரேட்டில் மைனஸில் உள்ள மும்பை அணியும் கூட ரன்ரேட்டில் பிளஸ் பாயிண்ட்டில் உள்ள பெங்களூர், ராஜஸ்தான் அணிகளை தாண்டி ‛பிளேஆப்' சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்று முதலில் நடக்கும் போட்டியில் மும்பை-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 2வது போட்டியில் பெங்களூர்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று, 2வது போட்டியில் பெங்களூர் அணி தோல்வியடைய வேண்டும். இது நடந்தால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் ரன்ரேட் மைனஸில் இருந்தாலும் ‛பிளேஆப்' சுற்றுக்குள் எளிதாக நுழையும்.

மாறாக முதல் போட்டியில் மும்பை அணியும், 2வது போட்டியில் பெங்களூர் அணியும் வென்றால் ரன்ரேட் தான் மும்பை அணியின் ‛பிளேஆப்' கனவை நிர்ணயிக்கும். அதாவது இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை மும்பை அணி குறைந்தபட்சம் 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இது நடக்கும்பட்சத்தில் பெங்களூர் அணி குஜராத்தை தோற்கடித்து வெற்றி பெற்றாலும் மும்பை அணி ‛பிளேஆப்' செல்ல வாய்ப்புள்ளது.

அதாவது பெங்களூர் மற்றும் மும்பை இன்று வெல்லும்பட்சத்தில் இருஅணிகளும் 16 புள்ளிகளை பெறும். ஆனால் 80க்கும் அதிகமான ரன்களில் மும்பை வெற்றி பெற்றால் பெங்களூர் அணியை ரன்ரேட்டில் முந்தும். இதன்மூலம் மும்பை அணி ‛பிளேஆப்' சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ஐபிஎல்லில் இருந்து பெங்களூர் அணி 16 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் 14 புள்ளிகளுடன் வெளியேற்றப்படும்.

மாறாக இன்றைய போட்டியில் மும்பை, பெங்களூர் அணிகள் தோற்கும் பட்சத்தில் இந்த 2 அணிகள் மட்டுமின்றி ராஜஸ்தான் அணியும் 14 புள்ளிகளுடன் இருக்கும். அதன்படி பார்த்தால் ரன்ரேட் அடிப்படையில் தான் ஒரு அணி ‛பிளேஆப்' சுற்றுக்கு செல்லும். மும்பை அணி ஏற்கனவே மைனஸில் இருப்பதால் இன்று தோற்றால் வெளியேறிவிடும். இதனால் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

இது நடக்காமல் இருக்கும் பட்சத்தில் பெங்களூர், ராஜஸ்தான் ஆகியவற்றில் எந்த அணி ரன்ரேட் அதிகம் வைத்துள்ளதோ அது ‛பிளேஆப்' செல்லும். இவ்வாறு பிளேஆப் செல்லும் அணி 24ம் தேதி லக்னோ அணியுடன் ‛எலிமினேட்டர்' போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+