"ஸ்லோ பாய்சன்.." உணவில் மெல்ல கலக்கப்பட்ட கெமிக்கல்! காதலனுடன் இணைந்து கணவரை தீர்த்து கட்டிய கவிதா
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் காதலனுடன் சேர இளம் பெண் கணவரை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணத்திற்கு மீறி உறவு காரணமாக ஏற்படும் குற்றச் சம்பவங்கள் இப்போது அதிகரித்து வருகிறது. நாடு முழுக்க நடக்கும் பல சம்பவங்கள் திருமணத்திற்கு மீறி உறவால் படுகொலையில் முடிந்துள்ளது.
அப்படியொரு கொடூர கொலை சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது. தனது காதலனுடன் இணைய மும்பை பெண் செய்த கொடூர சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா தம்பதி
மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் கமல்காந்திற்கும் இவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகியிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் கமல்காந்திடம் இருந்து பிரிந்து வந்துவிட்டார். இருப்பினும், தங்கள் குழந்தையின் எதிர்காலத்தைக் காரணம் காட்டி அவர் மீண்டும் மும்பை சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று கமல்காந்த் உடன் இணைந்து குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளார்,.

வயிற்று வலி
இதற்கிடையில் கமல்காந்தின் தாயாருக்கு சில மாதங்களுக்கு முன்பு, வயிற்றில் திடீரென மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்கள் கழித்து, கமல்காந்துக்கும் அவரது தாயாருக்கு ஏற்பட்டதைப் போலவே வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளது.

உயிரிழப்பு
அங்கு மருத்துவர்கள் அவரை டெஸ்ட் செய்த போது, அவரது ரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.. இது மனித ரத்தத்தில் காணப்படும் அசாதாரண உலோகப் பொருட்களாகும். இதனால் மோமான உடல்நிலை பாதிப்பு ஏற்படும் மருத்துவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த நவ. 19ஆம் தேதி பம்பாய் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சிக்கிய மனைவி கவிதா
முதலில் போலீசார் இதைத் தற்செயலான மரணம் என்றே வழக்குப் பதிவு செய்தனர்.. இருப்பினும், கமல்காந்தின் சகோதரி தனது அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் புகார் அளித்தார். நன்றாக இருந்த மனிதருக்கு எப்படி திடீரென இந்தளவுக்கு உடல்நிலை மோசமாகி இருக்கும் எனச் சந்தேகித்த மும்பை போலீசார் இந்த வழக்கை மும்பை க்ரைம் பிரான்ஞ்க்கு ஒப்படைத்தனர். அப்போது க்ரைம் பிரான்ஞ் போலீசார் நடத்திய விசாரணையில் தான், இந்தக் கொடூர சம்பவத்திற்குக் காரணம் கவிதா என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

உணவில் கெமிக்கல்
கவிதாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிதேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அவர்களின் திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆர்சனிக் மற்றும் தாலியம் கெமிக்கல்கலை அவர் தனது கணவரின் உணவில் மெல்லச் சேர்த்து வந்துள்ளார். அதைச் சாப்பிடச் சாப்பிட கமல்காந்த் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி, ஒரு கட்டத்தில் அவரது உயிரையே பறித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கவிதா மற்றும் அவரது காதலன் ஹிதேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது
உயிரிழந்த கமல்காந்தின் மருத்துவ அறிக்கை, அவரது குடும்ப உறுப்பினர்களின் தந்த வாக்குமூலத்தால் தான் போலீசாருக்கு கவிதா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கவிதா தனது காதலன் ஹதேஷ் உடன் இணைந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்த ஹதேஷ் வேறு யாரும் இல்லை. கொலை செய்யப்பட்ட கமல்காந்த் உடன் சிறு வயதில் இருந்தே நண்பராக இருந்தவர் தான். கமல்காந்த் தாயாரும் இதேபோல உயிரிழந்த நிலையில், அதற்கும் கவிதா காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் இப்போது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications