ஆஹா.. அள்ளி தரும் டாடா! மிக குறைந்த விலையில் விமான டிக்கெட்.. ஏர் இந்தியாவின் அட்டகாசமான ஆஃபர்!
மும்பை: இந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவை அதிகரித்து வரும் நிலையில், டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இப்போது அட்டகாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இதன் கீழ் நீங்கள் வெறும் ரூ.1349க்கு உள்நாட்டு விமானச் சேவையை புக் செய்யலாம். இந்த சலுகையை எப்படிப் பெறலாம்.. இதில் உள்ள கண்டிஷன்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சுற்றுலாவைத் தாண்டி, வழக்கமான பயணங்களுக்கு விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே உள்நாட்டு விமானச் சேவையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
இதற்கிடையே இந்தியாவின் டாப் விமான நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் ஏர் இந்தியா தனது இணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான குறுகிய கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்த சிறப்பு விற்பனையில் குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை ₹1,349க்கும், சர்வதேச விமான டிக்கெட்டுகள் ₹5,786க்கும் புக் செய்யலாம். அதேநேரம் இந்த விலை என்பது குறிப்பிட்ட ரூட்களுக்கு மட்டும் தான். ஒவ்வொரு ரூட்டை பொறுத்தும் குறைந்தபட்ச விலை என்பது மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி சலுகையைப் பெறலாம்
இந்த சலுகையைப் பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம், மொபைல் செயலி மட்டுமின்றி இதர புக்கிங் சைட் வழியாக புக் செய்யும்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு சலுகை
உள்நாட்டு விமானங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் எக்ஸ்பிரஸ் லைட் என்ற ரக சீட்கள் ₹1,349ல் இருந்து தொடங்குகிறது. இதில் பயணிகளுக்கு செக்-இன் பேக்கேஜ் வசதி கிடையாது என்பதைக் கவனிக்க வேண்டும். ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே எடுத்துச் செல்லலாம். செக் இன் பேக்கேஜிற்கு தனியாக ரூ.1000 செலுத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் வேல்யூ என்ற ரக சீட்கள் ₹1,499ல் இருந்து தொடங்குகிறது. இதில் செக் இன் லக்கேஜ் 15 கிலோ வரை எடுத்துச் செல்லாம். ஜூன் 12, 2025 முதல் செப்டம்பர் 24 வரை பயணம் செய்ய இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்வதேச விமானங்களைப் பொறுத்தவரை, எக்ஸ்பிரஸ் லைட் சீட்கள் ₹5,786-ல் இருந்தும், எக்ஸ்பிரஸ் வேல்யூ கட்டணம் ₹6,128-ல் இருந்தும் தொடங்குகிறது. இது தவிர எக்ஸ்பிரஸ் ப்ளக்ஸ் சீட்களின் கட்டணம் ₹7,041-ல் இருந்தும் தொடங்குகிறது. நாளை ஜூன் 9ம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை விலையில் புக்கிங் செய்யலாம். எனவே, இந்த காலகட்டத்தில் டிரிப் பிளான் இருந்தால் உடனடியாக புக் செய்யுங்கள்.
கூடுதல் கட்டணம் இருக்கா?
இதில் எக்ஸ்பிரஸ் லைட் என்ற குறைந்தபட்ச பிரிவில் கன்வினியன்ஸ் கட்டணம் தனியாக வசூலிக்கப்படாது.. மேலும் பயணிகள் கூடுதல் கட்டணம் இல்லாமல் 3 கிலோ வரை கேபின் பேக்கேஜை எடுத்துச் செல்லலாம். செக்-இன் பேக்கேஜ் தேவைப்படுவோர் முன்பு குறிப்பிட்டதை போலத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இது தவிர மாணவர்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கும் சிறப்புச் சலுகையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த சிறப்பு விற்பனை, குறைந்த கட்டணத்தில் விமான பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு ஒரு நல்ல சான்ஸை வழங்குகிறது.












Click it and Unblock the Notifications