க்ளாஸ் + மாஸ் = சுப்மன் கில்.. அலறுவாங்கும் பவுலர்ஸ் - இங்கி., சீரிஸிலும் "அதிர்வேட்டு" ரெடி
மும்பை: இங்கிலாந்தில் சவால்மிக்க பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இளம் வீரர் சுப்மன் கில் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. பட்டையைக் கிளப்புவாரா?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

புதிய அனுபவம்
இதில் குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விக்கெட் கீப்பர் சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் என்பவரையும் அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ.

பிசிசிஐ அபார நம்பிக்கை
இதில், சுப்மன் மீதான எதிர்பார்ப்பு தனி ரகம் எனலாம். இந்தியாவுக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கில் 378 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 34.36. பெஸ்ட் ஸ்கோர் 91. மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். இவரிடம் இருந்து எதிர்பார்த்த கிரிக்கெட் இதுவல்ல. ஆனால், எந்த போட்டியிலும் அச்சப்படாமல், மிக நேர்த்தியாகவே ஷாட்ஸ்களை தேர்வு செய்து ஆடி வந்தார். அவர் அடித்த மூன்று அரைசதங்களும் ஸ்டைலிஷானவை. ஆனால், சதமாக கன்வெர்ட் செய்வதில் தான் கோட்டை விட்டார். எனினும், பிசிசிஐ இவர் மீது ரோமியோ மீது ஜுலியட் வைத்த காதலின் ஆழத்தை விட அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளது.

கிளாஸ் + மாஸ்
குறிப்பாக, கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸி., மண்ணிலேயே அந்நாட்டின் பவுலர்களை ஓட விட்டார். 3 போட்டிகளில் 259 ரன்கள். பெஸ்ட் ஸ்கோர் 91. பேட்டிங் ஆவரேஜ் 51.80. அனைத்திலும் கிளாஸ் அண்ட் மாஸ் கலந்து கலவை. எல்லாவற்றையும் விட கான்ஃபிடன்ட். தன் மேல் அவர் வைத்திருக்கும் அந்த கான்ஃபிடன்ட் ஒவ்வொரு இன்னிங்ஸின் ஒவ்வொரு பந்திலும் பேசியது. தன்னால் சதம் அடிக்க முடியவில்லை என்றோ, தவறான ஷாட்ஸ் அடித்து அவுட்டாகிவிட்டோமே என்ற கவலையோ அவரிடம் துளியும் இல்லை. களத்தில் நிற்கும் வரை என்ஜாய் செய்கிறார். அவர் வயதை ஒத்த ப்ரித்வி ஷா-விடம் இல்லாத குணம் இதுதான்.

நாமும் நம்புவோம்
ஆஸ்திரேலியாவில் தான் காட்டிய அதே பெர்ஃபாமன்ஸை, அப்படியே இங்கிலாந்திலும் கேரி ஃபார்வர்டு செய்வார் என்று பிசிசிஐ நம்புகிறது. ரசிகர்கள் நம்புகிறார்கள். நாமும் தான். அணியின், எதிர்கால சூப்பர் ஸ்டார் வரிசையில் முன் சீட்டில் அமரும் அத்தனை தகுதியும் கொண்ட சுப்மன் கில், இங்கிலாந்தில் தனது சேட்டையை செமத்தியாக செய்து முடிப்பார் என்று நம்புவோம்.

நாமும் நம்புவோம்
ஆஸ்திரேலியாவில் தான் காட்டிய அதே பெர்ஃபாமன்ஸை, அப்படியே இங்கிலாந்திலும் கேரி ஃபார்வர்டு செய்வார் என்று பிசிசிஐ நம்புகிறது. ரசிகர்கள் நம்புகிறார்கள். நாமும் தான். அணியின், எதிர்கால சூப்பர் ஸ்டார் வரிசையில் முன் சீட்டில் அமரும் அத்தனை தகுதியும் கொண்ட சுப்மன் கில், இங்கிலாந்தில் தனது சேட்டையை செமத்தியாக செய்து முடிப்பார் என்று நம்புவோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications