என் வீட்டு கேட்டுப் பக்கம் யாரும் வந்துராதீங்க.. ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை.. !

Subscribe to Oneindia Tamil

மும்பை: கொரோனா வைரஸ் பயத்தில் உள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தன்னை சந்திக்க ரசிர்கள் யாரும் வீட்டு பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Recommended Video

    World Cup ICC : ஐசிசியின் விதியை நடிகர் அமிதாப் கிண்டலடித்துள்ளார்- வீடியோ

    சீனாவின் வுகானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    i am not going to come : Amitabh Bachchan request Fans Not To Gather At His Jalsa House

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவர்களையும் தனியாக வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இப்படி கண்காணிப்பில் மட்டுமே பல ஆயிரம் பேர் இந்தியாவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    உலக சுகாதார மையத்தால் தொற்று நோய் என்று அறிவிக்கப்பட்ட கொரோனாவுக்கு இதுவரை இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 5300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று நோய் வயதானவர்களையும், இதய பாதிப்பு உள்ளவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே.. அதிகமாக உயிரிழக்க வைத்துள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக செய்து வருகின்றன. பொதுமக்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசுகள் செய்து வருகின்றன.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பயத்தில் உள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தன்னை சந்திக்க ரசிர்கள் யாரும் வீட்டு பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமிதாப்பச்சன் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் கொஞ்ச நாளைக்கு தவிர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், என் மேல் அன்பு கொண்ட அனைவருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து இன்று என் வீட்டு வாசலுக்கு ( ஜல்சா வீட்டு வாயிலில்) வர வேண்டாம் ... ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்கு நான் வரப்போவதில்லை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் ... பாதுகாப்பாக இருங்கள்." என்று கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+