என்கிட்டயே ஹிந்தியா? மும்பையில் கேள்விகேட்ட பத்திரிகையாளரை அலறவிட்ட வைகோ! என்ன சொன்னார்? பரபரப்பு
மும்பை: மும்பையில் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தியில் கேள்வி கேட்ட நிலையில் அதற்கு வைகோ கூறிய பதில் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வெற்றி பெறும் முனைப்பில் வியூகங்கள் வகுத்த வருகிறது. இத்தகைய சூழலில் தான் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.

‛இந்தியா' கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்றும், இன்றும் நடந்தது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளின் 63 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள பற்றி விவாதிக்கப்பட்டது. மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, சமூக வலைதள குழுக்கள் உருவாக்கப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மும்பையில் 2 நாட்கள் நடந்த ‛இந்தியா' கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக தலைவர் வைகோ வெளியே வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தியில் வைகோவிடம் கேள்வி எழுப்பினார். அதனை கவனித்த வைகோ ‛ஐ டோண்ட் நோ ஹிந்தி'' என பதிலளித்தார். இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛சார் உங்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியும். மீட்டிங் எப்படி இருந்தது? எதிர்கால திட்டம் என்ன? என்பது பற்றி ஆங்கிலத்தில் கேட்டார்.
இதற்கு வைகோ, ‛‛மீட்டிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் தங்களின் ஆலோசனை கூறினர். மீட்டிங்கில் ஒருங்கிணைந்த கருத்து ஏற்பட்டுள்ளது. ஒருமனதாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். இந்நிலையில் தான் பத்திரிகையாளர் ஹிந்தியில் எழுப்பிய கேள்விக்கு வைகோ ஹிந்தி தெரியாது என பதிலளித்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications