லோக்சபா தேர்தல் களத்தில் குதித்தது "இந்தியா" அணி! தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!
மும்பை: "இந்தியா" அணியில் உள்ள கட்சிகள் மாநிலங்கள் தங்களுக்கு இடையே லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்க வேண்டும் என மும்பை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளின் 63 தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மும்பையில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற்ற நிலையில் மத்திய அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை முதலில் அறிவித்தது. பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் என நாடு முழுவதும் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்குமான தேர்தலை நடத்தும் முயற்சிகள் குறித்து ஆராய குழுவையும் அறிவித்தது.
இந்த நிலையில் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது; "இந்தியா" கூட்டணி கட்சிகள் தங்களது மாநிலங்களில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தொடங்குவது; விட்டுக் கொடுக்கும் மன்பான்மையுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் சந்திரயான் 3 விண்கமல் நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தும் இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான விவரங்கள்: இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இதன்மூலம் தீர்மானித்துள்ளோம். வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல் ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கப்படும்.
இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்கிறோம்.
இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பல்வேறு மொழிகளில் ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பதெனத் தீர்மானிக்கிறோம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications