ஒரே நாடு ஒரே தேர்தல்.. அதெப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்? மோடியை விளாசிய "இந்தியா" 'தலை'கள்!
மும்பை: மத்திய பாஜக அரசு "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு "இந்தியா" கூட்டணி தலைவர்கள் கடும் எதிர்ப்புடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 13 தலைவர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இடம் பெறவில்லை.

இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய சிபிஐ தேசிய செயலாளர் டி ராஜா, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறது மத்திய அரசு. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நாட்டின் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டாமா? அதெப்படி தன்னிச்சையாக முடிவெடுத்து அமல்படுத்த முடியும்? இந்தியாவை ஜனநாயகத்தின் தாய்நாடு என்கிறாரே பிரதமர் மோடி... இதுதான் ஜனநாயகமா? என்றார்.

உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். இதனை திசைதிருப்பும் வகையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறது மத்திய அரசு.

சிவசேனாவின் மற்றொரு தலைவரான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், நாட்டில் விவசாயிகள் பிரச்சனை உள்ளது; வேலைவாய்ப்பின்மை முதன்மை பிரச்சனையாக இருக்கிறது. சீனாவின் ஆக்கிரமிப்பு நெருக்கடியைத் தருகிறது. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டியிருந்தால் பாராட்டலாம். ஆனால் இந்த முதன்மை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு அமைத்துள்ள மத்திய அரசு, பணவீக்க விகிதம், வேலைவாய்ப்பின்மை, பெண்கள் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எப்போது குழு அமைக்குமாம்? என கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications