8 பேர்.. அப்படியே பாலிஷ் பண்ண மாதிரி.. இந்தியா - ஆஸி. மேட்சில் நடந்த சம்பவம்.. நோட் பண்ணீங்களா?

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகிய 6 பவுலர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்து உள்ளது. முக்கியமாக அவரின் லைன், லென்த் இரண்டுமே சிறப்பாக அமைந்து உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. 2-1 என்ற கணக்கில் இந்த தொடரை வென்றது.

கடைசி டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டி தொடங்கி உள்ளது. முதல் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

மேட்ச்

மேட்ச்

இன்று ஆடும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார். இனி இவரை பெரும்பாலான ஒருநாள் போட்டிகளில் முழு நேர கேப்டனாக பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியே கே. எல் ராகுல் இருந்தும் கூட ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார். இன்று ஆடும் அணியில், ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர். இந்திய அணியில் 8வது இடம் வரை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

நல்ல நீளாமன பேட்டிங் இருக்க வேண்டும் என்பதற்காக இன்று ஷரத்துல் தாக்கூர் வரை பேட்டிங் உள்ளது. அதே போல் கடந்த முறை இந்தியா இதே வான்கடேவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்ற வருடம் ஆடிய போது இந்திய அணி 5 பவுலிங் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதில் பாடம் கற்ற இந்திய அணி தற்போது கூடுதலாக ஒரு பவுலருடன் இறங்கி உள்ளது. ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகிய 6 பவுலர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

பாண்டியா

பாண்டியா

இன்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் ஆடினாலும் அவரின் லைன் மற்றும் லென்த் மிக சிறப்பாக இருந்தது. நன்றாக பாலிஷ் செய்த வீரர் போல கட்டுப்பாட்டுடன் லைனை மிஸ் செய்யாமல் பவுலிங் செய்தார். அதோடு 6வது ஓவரிலேயே பவுலிங் செய்ய தொடங்கிய ஹர்திக் பாண்டியா 13வது ஓவரில் ஸ்மித் விக்கெட்டையும் எடுத்தார். கடந்த 7 போட்டிகளில் 4 முறை ஸ்மித் விக்கெட்டை பாண்டியா எடுத்துள்ளார். வெறும் 72 ரன்களை மட்டுமே பாண்டியா விட்டுக்கொடுத்துள்ளார்.

டெக்

டெக்

வரிசையாக டெக்கில் வீசினாலும் கட்டுப்பாட்டுடன் வீசினார். அதேபோல் ஓவருக்கு 2 ஷார்ட் பந்தாவது ஸ்லோவாக வீசினார். முன்பெல்லாம் ஆல் ரவுண்டர் போல வீசும் அவர் தற்போது முழு நேர பவுலர் போல பவுலிங் செய்தார். இதன் காரணமாகவே தொடக்கத்திலேயே ஸ்மித் விக்கெட்டை எடுத்தார். அவர் இன்று முழு கோட்டா பவுலிங்கை வீசுவது சந்தேகமே. பெரும்பாலும் 7 ஓவர்கள் வரை மட்டுமே அவர் வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+