Year ender: 2024 ஆம் ஆண்டு யூடியூப் டிரென்டிங்கில் முதலிடம் பிடித்த வீடியோ எது தெரியுமா?
மும்பை: ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வீடியோக்கள் 2024 ஆம் ஆண்டு யூடியூப் டிரென்டிங் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது.
யூடியூப் எனும் வீடியோ மூலம் நிறைய பேர் சுவாரஸ்யமான வீடியோக்களை போட்டு வருமானம் ஈட்டி வருகிறார்கள். கொரோனா வந்தாலும் வந்தது, வீட்டில் இருந்த பலர் யூடியூப் சேனல்களை தொடங்கி, தங்கள் முழு வித்தையையும் இறக்கி வருகிறார்கள்.

அது போல் திரை பிரபலங்கள், சீரியல் கலைஞர்கள் மட்டுமில்லாமல் சாமானியர்களும் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர். இன்று யூடியூப் சோசியல் மீடியாவில் பெரிய பங்காற்றி வருகிறது. யூடியூப்பில் சமைப்பது, பாடம் கற்றக் கொடுப்பது, கைவினை பொருட்கள் கற்றுக் கொடுப்பது, கார் ஓட்ட சொல்லிக் கொடுப்பது, எங்கே எந்த பொருட்கள் விற்பனைக்கு இருக்கு, எங்கு குறைந்த விலையல் கிடைக்கும் போன்ற விஷயங்கள் எல்லாமே யூடியூபில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் சினிமா நடிகர்களின் பாடல்கள் கூட யூடியூபில் வெளியாகி இத்தனை மில்லியன் லைக்ஸ், வியூஸ் பெற்று சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் யூடியூபில் எது டிரென்டிங்கில் இருந்தது என்பது குறித்து ஆண்டு இறுதியில் வெளியாகும்.
அந்த வகையில் 2024-ஆம் ஆண்டு யூடியூப் டிரென்டிங் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட்டின் திருமண வீடியோ டிரென்டில் முதலிடத்தில் உள்ளது.
முகேஷ் அம்பானிக்கு இரு மகன்கள் ஒரு மகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லேகா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. அது போல் மகள் ஈஷா அம்பானிக்கு பிராமல் குடும்பத்தை சேர்ந்த ஆகாஷ் பிராமலுடன் திருமணமாகியுள்ளது.
இவர்களில் கடைசி மகன் ஆனந்த் அம்பானி. இவர் தொழிலதிபர் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டை காதலித்து வந்தார். இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத் தொடந்து இந்த ஆண்டு ஜனவரியில் ப்ரீ வெட்டிங் எனப்படும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து திருமணம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த திருமணத்திற்கு ஹாலிவுட் ,பாலிவுட், கோலிவுட் நடிகர்கள், நடிகைகள் வந்திருந்தனர். அது போல் இந்திய தொழிலதிபர்கள், வெளிநாட்டு தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டிருந்தார். அது போல் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகி ரிஹான்னாவின் இசை நிகழ்ச்சி பல கோடி செலவில் நடத்தப்பட்டது. இந்த திருமண வீடியோக்கள் யூடியூப்களில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோக்களை 650 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவில் மணமக்கள், விருந்தினர்கள், முகேஷ் அம்பானியின் மனைவி, மகள், மூத்த மருமகள் உள்ளிட்டோர் அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்பட்டன.












Click it and Unblock the Notifications