Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னாள் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்கும் சாஹல்.. விவாகரத்துக்கு தனஸ்ரீ போட்ட கண்டிஷன்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக் கொண்டுள்ளார். அதில் ஏற்கனவே ரூ.2.37 கோடி ஜீவனாம்சம் சாஹல் கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள ரூ.2.38 கோடி தொகை விவாகரத்துக்கு பின் வழங்க முன் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டவர் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல் வரலாற்றில் சுழற்பந்துவீச்சாளர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைப்பது இதுவே முதல்முறையாகும். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும், ஐபிஎல் தொடரில் சாஹலின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது.

yuzvendra chahal dhanashree verma

சாஹல் - தனஸ்ரீ திருமணம்

சாஹலின் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்தாலும், குடும்ப வாழ்க்கை சிக்கலில் இருந்து வந்தது. கிரிக்கெட் வீரர் சாஹலுக்கும், மருத்துவரான தனஸ்ரீ வர்மாவுக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் தனஸ்ரீ வர்மாவிடம் யோகா கற்றுக் கொண்ட போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் - தனஸ்ரீ வர்மா

சாஹலை திருமணம் செய்து கொண்டதால், தனஸ்ரீ வர்மாவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர தொடங்கினர். இதனால் இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீ வர்மா இன்ஃபுளூயன்சராகவும் செயல்பட்டு வந்தார். அதன்பின் மாடலிங், டான்ஸ், நடிப்பு என்று பல்வேறு துறைகளில் தனஸ்ரீ வர்மா கால் பதித்தார். இதனிடையே தனஸ்ரீ வர்மா - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காதலிப்பதாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது.

தனஸ்ரீ வர்மா மறுப்பு

இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தால், தனஸ்ரீ வர்மா பக்கம் கேமரா திரும்பியது. அதேபோல் இருவரும் ஒரே பதிவுகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் - தனஸ்ரீ காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதன்பின் தனஸ்ரீ வர்மா ஸ்ரேயாஸ் ஐயர் உடனான காதல் செய்திகளை வதந்தி என்று மறுத்து வந்தார்.

நண்பர்களுடன் நெருக்கம்

இருப்பினும் தனஸ்ரீ வர்மா அவரின் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்தது பேசுபொருளாகியது. இதற்கு சாஹலின் தோற்றமே காரணம் என்று ரசிகர்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதி முதலே சாஹல் - தனஸ்ரீ வர்மா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்ப ஜனவரி மாதம் இருவரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தினர்.

விவாகரத்து

இதன்பின் பிப்.5ஆம் தேதி சாஹல் - தனஸ்ரீ வர்மா இருவரும் மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி முறையிட்டனர். அப்போது 2022ஆம் ஆண்டு முதலே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சாஹலிடம் இருந்து ரூ.60 கோடி ஜீவனாம்சம் கோரி இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

ஜீவனாம்சம் கோரிய தனஸ்ரீ வர்மா

இதனால் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தனஸ்ரீ வர்மா குடும்பத்தினரிடம் இருந்து ரூ.60 கோடி ஜீவனாம்சம் என்பது வதந்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது, சாஹலிடம் இருந்து தனஸ்ரீ வர்மா தரப்பில் கோரப்பட்ட ஜீவனாம்சம் தொடர்பாக தகவல் வெளி வந்துள்ளது.

எவ்வளவு ஜீவனாம்சம்?

அதன்படி தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சமாக சாஹல் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதில் ரூ.2.37 கோடி ஏற்கனவே சாஹலை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள ரூ.2.38 கோடி விவாகரத்துக்கு பின் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்களின் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில், சுமார் 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+