இரவு முழுவதும் அப்படியே இருக்க சொன்ன இண்டிகோ.. பதறிப்போன பயணிகள்.. விசாரணை ஆரம்பம்
மும்பை: பட்ஜெட் ரேட்டில் விமான சேவை வழங்குவதால் பிரபலமான இண்டிகோ விமான சேவை நிறுவனம், இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த சர்ச்சை சம்பவம் குறித்து விமான ஒழுங்குமுறை அமைப்பு, விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் புதன்கிழமை இண்டிகோ பல விமானங்களை ரத்து செய்தது. இதனால், பயணிகள் அவதியை எதிர்கொள்ள நேர்ந்தது.

இதுபற்றி பயணி ஒருவர் கூறுகையில் 'எனது இண்டிகோ விமானம் புதன்கிழமை மாலை 07.55 மணிக்கு ஜெய்ப்பூருக்கு புறப்பட வேண்டியது. இருப்பினும், வியாழக்கிழமை காலை 6 மணிக்குதான் விமானம் புறப்பட்டது, நான் காலை 8 மணியளவில் ஜெய்ப்பூரை அடைந்தேன். நள்ளிரவில் விமானத்தில் ஏற்றப்பட்டு அப்படியே உட்கார வைக்கப்பட்டோம். எங்களை வெளியே விடவில்லை. இன்று காலைவரை விமானத்திற்கு உள்ளேயே இருந்தோம். எங்களுக்கு இரவு உணவு கூட வழங்கப்படவில்லை' என்றார்.
விமானத்தில் இருந்த சில பயணிகள் கோபமடைந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆதங்கத்தாலும், பதற்றத்தாலம், சில பயணிகள் தொழில் பாதுகாப்பு படையினரான சி.ஐ.எஸ்.எஃபுக்கு தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு கதறியுள்ளனர்.
இது குறித்து விமான ஒழுங்குமுறை அமைப்பு மூத்த அதிகாரி ஒருவரிடம் பிடிஐ செய்த நிறுவனம் கேட்டபோது, "இந்த விஷயத்தை நாங்கள் விசாரிப்போம்" என்று கூறியுள்ளார். இது குறித்த கேள்விக்கு இண்டிகோ இதுவரை பதிலளிக்கவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications