தோனி கொடுத்த ரியாக்சன்.. கொஞ்சம் கூட யோசிக்காமல்.. "ராஜபக்சே" எடுத்த முடிவு.. மேட்சில் என்ன நடந்தது?
மும்பை: சிஎஸ்கே பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டத்தில் தோனி கொடுத்த ரியாக்சன் ஒன்று இன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
பஞ்சாப் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இன்று எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியது.
இரண்டு போட்டிகளில் டாஸ் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

பேட்டிங்
இதையடுத்து பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே திணறியது. இரண்டாவது பந்திலேயே மயங்க் அகர்வால் அவுட்டானார். வெறும் 4 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் முகேஷ் சவுத்திரி பந்தில் அவுட் ஆனார். உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறிய நிலையில் சிஎஸ்கே அணி நம்பிக்கையுடன் ஆட தொடங்கியது. இதையடுத்து தவான், ராஜபக்சே ஆகியோர் ஆடி வந்தனர்.

ராஜபக்சே
ராஜபக்சே இலங்கை வீரர். பஞ்சாப் அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளில் ராஜபக்சே சிறப்பாக ஆடினார். வெறும் 5 பந்துகள் பிடித்த அவர் ஒரு சிக்ஸ் உட்பட 9 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கிறிஸ் ஜோர்டன் பந்தில் ராஜபக்சே அடித்துவிட்டு ஓட முயன்றார். தவான் மறுமுனையில் இருந்தார். ஆனால் அதற்குள் பந்தை பிடித்து ஜோர்டன் ரன் அவுட் எடுக்க முயன்றார். ஆனால் அவரால் ட்ரைக்ட் ஹிட் அடிக்க முடியவில்லை.

தோனி
வேகமாக ஓடி வந்து இந்த பந்தை பிடித்த தோனி, பாய்ந்து வந்து அப்படிய ஸ்டம்ப்பை அடித்தார். தோனி இப்படி செய்ததும் அவர் முகம் முழுக்க சிரிப்பாக இருந்தது. தோனி இந்த ரியாக்சன் கொடுத்ததும் அது விக்கெட் என்று தெரிந்துவிட்டது. 2016 டி 20 உலகக் கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தின் விக்கெட்டை கடைசி பந்தில் எப்படி ரன் அவுட் செய்வாரோ அதேபோல்தான் இன்றும் தோனி வேகமாக ஓடி வந்து விக்கெட் எடுத்தார்.

ராஜபக்சே வெளியேறினார்
ஆனால் இது விக்கெட்டா என்று உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் தோனியின் ரியாக்சன் பார்த்ததும் அது விக்கெட் என்பதை ராஜபக்சே உணர்ந்து கொண்டார். இதையடுத்து வேக வேகமாக மைதானத்தில் இருந்து அவர் வெளியேறும் முடிவை எடுத்தார். 3வது நடுவர் முடிவு வரும் வரை அவர் காத்திருக்கவில்லை. அதன்பின் 3வது நடுவருக்கு விக்கெட்டை உறுதி செய்தார்.

ஆக்டிவ்
இன்றைய போட்டியில் தோனி எக்ஸ்பிரஸ்சிவாக காணப்பட்டார். இன்னொரு பந்தில் லியாம் லிவிங்ஸ்டன் கேட்சை ராயுடு விட்டதும் அவரை பார்த்து தோனி முறைத்தார். அதேபோல் பின்னர் மீண்டும் லியாம் லிவிங்ஸ்டன் பந்தை தோனி சரியாக பிடிக்க முடியாமல் தரையில் குத்தினார். அப்போது அவர் முகத்தில் ஏமாற்றமான ரியாக்சனை காட்டியது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications