ஐபிஎல் 2023 - இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு அதிக வாய்ப்பு.. சாதனை படைக்குமா சிஎஸ்கே

Subscribe to Oneindia Tamil

மும்பை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. கடந்த சீசன் முதல் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண் மற்றும் வெளியூர் என பாணியில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

ஐபிஎல் மினி ஏலம் மூலம் பல்வேறு அணிகளும் தங்களது வீரர்களை மாற்றி அணிகளையும் பலமாக கட்டமைத்து இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இம்முறை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

சிஎஸ்கேக்கு வாய்ப்பு

சிஎஸ்கேக்கு வாய்ப்பு

நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த முறை புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து படுதோல்வியை சந்தித்தது. மேலும் கடந்த முறை கேப்டன் சிக்கல், ஜடேஜா, தீபக்சாகர் ஆகியோர் காயம் என பல்வேறு சிக்கல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் சந்தித்தது. ஆனால் இம்முறை அப்படி எந்த பிரச்சனையும் இல்லை. தல தோனியை எப்போதும் போல் அணியை வழி நடத்துகிறார்.

பலம்

பலம்

மேலும் அதிரடி ஆல்ரவுண்டர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷாயிக் ரசித், நிஷாந்த் சிந்து போன்ற பல இளம் வீரர்களும் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். கடந்த முறை வாய்ப்பு கிடைக்காத ஹங்கர்கேகர் இம்முறை உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி அசத்திருக்கிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

இதேபோன்று ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஐபிஎல் சீசனில் பத்தாவது இடத்தை பிடித்து மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இம்முறை இழந்த பெருமையை மீட்க வேண்டிய நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பும்ரா காயம் அமைந்துள்ளது. கடந்த முறை செய்த தவறை திருத்திக் கொண்டு மும்பை அணி இம்முறை நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

லக்னோ அணி

லக்னோ அணி


இதேபோன்று லக்னோ அணியும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. கே எல் ராகுல் குயின்டன் டி காக், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான் ,மார்க்கஸ் ஸ்டோரிஸ் , குர்னல் பாண்டியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள். இதனால் லக்னோ அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இம்முறையாவது கோப்பை வெல்லுமா என ஆர் சி பி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். டுப்ளசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ,தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அந்த அணியும் சாதாரணமாக எண்ணிவிட முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+