வாயை பிளக்க வைக்கும் "ஸ்வா ரயில்.." இனி A to Z எல்லாம் ஒரே இடத்தில்.. இதை யாருமே எதிர்பார்க்கல!
டெல்லி: இப்போது நாம் ரயில் பயணிகளில் டிக்கெட் புக் செய்ய ஒரு செயலி, உணவு ஆர்டர் செய்ய ஒரு செயலி, ரயில் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்க ஒரு செயலி என தனித்தனியாகச் செயலிகளைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், இந்த குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ரயில்வே நிர்வாகம் இப்போது ஸ்வாரயில் என்ற அட்டகாசமான ஒரு சூப்பர் செயலியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் பெரிதும் பயன்படுத்தும் பொது போக்குவரத்து என்றால் அது ரயில்கள் தான். டிக்கெட் ரேட் குறைவாக இருப்பது, டாய்லெட் வசதி, நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்குச் சேவை இருப்பது என்று பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ரயில் பயன்பாடு அதிகரித்தே வருகிறது. அதற்கேற்ப ரயில்வே துறையை நவீனமயமாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தனித்தனி செயலிகள்
டிஜிடில் துறையில் இந்திய ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்ய ஐஆர்சிடிசி என்ற செயலியை வைத்துள்ளது. ஆனால், அதில் நாம் டிக்கெட்டை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். வேறு சேவைகளைப் பயன்படுத்த முடியாது. ரயில் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கத் தனியாக ஒரு செயலி தேவை.. அதேபோல ரயிலில் உணவு ஆர்டர் செய்யத் தனி செயலி. இப்படி பல்வேறு தனித்தனி செயலிகள் இருப்பதால் அது யூசர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கோரிக்கை
இதனால் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு சூப்பர் செயலி தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இந்தச் சூழலில் தான் ரயில்வே துறை ஸ்வாரயில் (SwaRail) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் இப்போது ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது ஐபோன்களிலும் கிடைக்கும். ஆன்ட்ராய்டு செல்போன்களிலும் கூட இப்போது சிலருக்கு மட்டுமே சோதனை முறையில் இந்த செயலி கிடைக்கும்.
ஸ்வா ரயில் ஒரு "சூப்பர் ஆப்" எனக் கூறப்படுகிறது. இதில் டிக்கெட் முன்பதிவு, ரயில்கள் பற்றிய தகவல்கள், உணவு ஆர்டர், சுற்றுலா பேக்கேஜ் என அனைத்தையும் ஒரே இடத்தில் செய்ய முடியும். இப்போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலியைப் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கும் சூழலில், அதை இந்த சூப்பர் ஆப் மாற்றும்.
எப்படி பயன்படுத்தலாம்
இந்த சூப்பர் செயலியில் உங்கள் வழக்கமான ஐஆர்சிடிசி ஐடி, பாஸ்வேர்ட் மூலமாகவே லாகின் செய்யலாம்...அல்லது இதிலேயே புதிய கணக்கையும் தொடங்கலாம்.. இதில் அட்டகாசமான க்ளீனா ஒரு டேஷ்போர்ட் இருக்கிறது. பிஎன்ஆர் ஸ்டேடஸ் செக் செய்வது முதல் உணவு டெலிவரி வரை அனைத்தையும் இதில் செய்யலாம். ஒவ்வொரு சேவைக்கும் தனியாக லாகின் செய்யத் தேவையில்லை.
குறிப்பாக ரயில் இப்போது எங்கே இருக்கிறது.. தாமதம் ஆகியுள்ளதா என்பதை செக் செய்ய இப்போது நாம் என்டிஇஎஸ் என்ற செயலியை தனியாக பயன்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், அதையும் கூட நாம் இந்த சூப்பர் செயலியான ஸ்வா ரயில் செயலியில் பார்த்துக் கொள்ளலாம்.
எல்லாம் ஒரே இடத்தில்
வெறுமன டிக்கெட் புக்கிங்கிற்கு என்று மட்டும் இல்லாமல்.. பயணத்திற்கு A டூ Z வரை உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.. ஹோட்டல் முன்பதிவுகள், சுற்றுலா பேக்கேஜ் மற்றும் பயணக் காப்பீடு ஆகியவையும் இதில் இருக்கிறது. இது சோதனை முறையிலேயே இப்போது வெளியிடப்பட்டுள்ளதால், திடீரென முடங்கவும் க்ரேஷ் ஆகவும் கூட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications