மோடி கேபினட்டில் அமைச்சராகும் சுப்ரியா சுலே? சரத்பவாரிடம் போன்போட்டு பேசிய பிரதமர்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்பவார்) அணி தலைவர் சரத்பவாருக்கு போன் செய்து பேசினார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரத்பவாரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. இதற்கிடையே தான் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

is-supriya-sule-entry-into-the-union-cabinet-pm-modi-conversation-with-sharad-pawar

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்தது. சரத்பவாரிடம் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி அவரிடம் இருந்து கைநழுவி சென்றது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். இப்போது அஜித் பவார் மனைவி சுனத்ரா பவார் கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளார். சுனத்ரா பவார் துணை முதல்வராக உள்ளார்.

சரத்பவார் தலைமையிலானவர்கள் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாஜக கூட்டணியில் இல்லை. தற்போது அஜித் பவார் மறைந்துள்ளதால் இருகட்சிகளும் மீண்டும் ஒன்றிணையும் என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில் தான் சமீபத்தில் சரத்பவார் உடல்நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் வீடு திரும்பி உள்ளார். சரத்பவார், பிரதமர் மோடி இடையே அரசியல் தாண்டி நல்ல நட்பு உள்ளது. இதனால் பிரதமர் மோடி, சரத்பவாருக்கு போன் செய்து நலம் விசாரித்ததாக சரத்பவாரின் நெருங்கிய ஆதரவாளர் விட்டால் மணியார் கூறியுள்ளார்.

இதுபற்றி விட்டால் மணியார் கூறுகையில், ''இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி, சரத்பவாருக்கு போன் செய்து பேசினார். நட்பாகவும், மரியாதை நிமித்தமாகவும் நலம் விசாரித்தார். முழுவதுமாக ஓய்வெடுக்கும்படி கூறினார். சுப்ரியா ரெடியாகிவிட்டார். சுப்ரியாவும், நானும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்கிறோம். நீங்கள் ஓய்வெடுங்கள். இது என்னுடைய கோரிக்கை என பிரதமர் மோடி கூறினார்.

இதற்கு சரத்பவார், நான் ஓய்வில் தான் இருக்கிறேன். நீங்கள் (பிரதமர் மோடி) அங்கு இருக்கும்போது நாட்டை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. நலம் விசாரித்ததற்கு நன்றி என கூறினார்'' என்றார். இது தற்போது கவனம் பெற்றதுது. பிரதமர் மோடி, 'நானும், சுப்ரியாவும் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்கிறோம்' என சரத்பவாரிடம் கூறியதாக விட்டால் மணியார் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால் சுப்ரியா சுலேவை பிரதமர் மோடி மத்திய அமைச்சராக்க ரெடியாகிவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த வார்த்தை அதிக கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் இதுபற்றி பிரதமர் மோடி – பாஜக தரப்பிலோ இல்லாவிட்டால் சரத்பவார் - மகள் சுப்ரியா சுலே தரப்பிலோ இன்னும் எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+