ப.சிதம்பரத்தை கைது செய்தது குட் நியூஸாம்.. இந்திராணி முகர்ஜி உற்சாகத்தை பார்த்தீங்களா
மும்பை: ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குட் நியூஸ் என்று, இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா, ஊழல் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 21 அன்று சிபிஐயால், தனது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மீடியா தொழிலதிபர், பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி ஆகியோரும் இணை குற்றவாளிகளாவர். தற்போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி இருவரும் தங்கள் மகள் ஷீனா போரா கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் உள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு நிதி பெற, எஃப்.ஐ.பி.பி.யின் ஒப்புதலைப் பெறுவதற்காக கார்த்தி சிதம்பரம் மற்றும் முகர்ஜி இடையே 1 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக, இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம், கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்க இயக்குநரகம் பல சந்தர்ப்பங்களில் விசாரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியிலும், கடந்த ஆண்டு டிசம்பர் 19 ம் தேதியும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்தது.
இந்த நிலையில், மும்பை நீதிமன்றம் வருகை தந்திருந்த இந்திராணி முகர்ஜி "ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது ஒரு நல்ல செய்தி" என்று கூறினார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications