இந்திய IT துறைக்கே ஆபத்து?டிரம்பால் அனைத்து ஐடி நிறுவன பங்குகளுக்கும் விழுந்த பேரிடி.. ஷாக் டேட்டா
மும்பை: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகளில் நம் நாட்டில் ஐடி நிறுவனங்களில் பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளன. எச்சிஎல், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெக்சாவர், விப்ரோ, டெக் மகேந்திரா உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்துள்ளன. இதனால் ஐடி ஊழியர்களுக்கு சிக்கலாக மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து பழிவாங்கி வருகிறார். முதலில் 50 சதவீத வரி விதித்த டிரம்ப் இப்போது அமெரிக்காவுக்கான எச்-1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளது. எச் -1பி விசாவை பயன்படுத்தி இந்தியர்கள் தான் அமெரிக்காவில் அதிக பலனை பெற்று வந்த நிலையில் அதற்கு டிரம்ப் செக் வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் இருந்து தான் நம் நாட்டில் செயல்படும் ஐடி நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸிங் முறையில் பணிகள் வழங்கப்பட்டு வுருகிறது. நம் நாட்டில் செயல்பட்டு வரும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவை சார்ந்து இயங்கி வருகின்றன. இதனையும் கெடுக்கும் வகையில் டிரம்ப் அரசு காய்நகர்த்தி வருகிறது.
இது அமெரிக்காவில் எச் -1 பி விசாவில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மட்டுமின்றி நம் நாட்டில் பணியாற்றும் ஐடி ஊழியர்களையும் கலங்க வைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் மும்பை பங்கு சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் நேற்று கடும் சரிவை எதிர்கொண்டன.
அதன்படி, நேற்றைய தினம் இன்ஃபோபீன்ஸ் (Infobeans) டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 8.08 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.
அதேபோல் ஹெக்சாவர் (Hexaware) ஐடி நிறுவனங்களின் பங்குகள் 7.08 சதவீதம் வரையும், எல்டிஐ மிண்ட்ட்ரீ (LTIMindtree) பங்குகள் 4.54 சதவீதம் வரையும், பெர்சிஸ்டென்ட் (Persistent) சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.19 சதவீதம் வரையும், டெக் மகேந்திரா (Tech Mahindra) நிறுவனத்தின் பங்குகள் 3.20 சதவீதம் வரையும் சரிந்தன.
அதேபோல் டசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.02 சதவீதம் வரையும், இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.61 சதவீதம் வரையும், விப்ரோ பங்குகள் 2.25 சதவீதம் வரையும் எச்சிஎல் நிறுவனத்தின் பங்குகள் 1.84 சதவீதம் வரையும் சரிவை சந்தித்தனர். மும்பை பங்கு சந்தையின் குறியீடு 2.73 சதவீதம் வரை சரிந்து 34,988.20 புள்ளியாக இருந்தது. இது ஐடி நிறுவனங்களையும், ஐடி ஊழியர்களையும் கலங்க வைத்துள்ளது.
இதுதொடர்பாக Livelong Wealth நிறுவனத்தின் நிறுவனரும், ரீசர்ஜ் மற்றும் அனலிஸ்ட்டுமான ஹரிபிரசாத் கூறுகையில், ‛‛புதிய எச் - 1பி விசா விண்ணப்பங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சத்தை கட்டணமாக விதித்துள்ளார். மேலும் ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் அவுட்சோர்ஸிங் பணியையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் காரணமாக பங்கு சந்தையில் ஐடி நிறுவனங்களில் பங்குகள் சரிவை சந்திக்க தொடங்கி உள்ளன'' என்றார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications