நான் கிளர்ச்சி செய்யவில்லை.. என்சிபிக்கு மொத்தமாக திருப்பிய அஜித் பவார்.. மௌனம் கலைத்தார்!
நான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளிர்ச்சி செய்யவில்லை என்று கட்சிக்கு திரும்பிய அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: நான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளிர்ச்சி செய்யவில்லை என்று கட்சிக்கு திரும்பிய அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடியும் நிலையை எட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவில் என்சிபியின் அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து பாஜகவிம் தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அம்மாநில முதல்வராக நாளை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். அங்கு பாஜகவிற்கு அளித்த வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.

மீண்டும் ஏற்றது
பாஜக கூட்டணியில் இருந்து தன்னுடைய விலகலுக்கு சரியான காரணத்தை அஜித் பவார் சொல்லவில்லை. பர்சனல் காரணங்களால் ஆதரவை வாபஸ் பெறுகிறேன் என்று மட்டும் குறிப்பிட்டார். தற்போது அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத் பவார் குடும்பமும் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மௌனம்
இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது முதல்முறையாக என்சிபியின் மூத்த தலைவர் அஜித் பவார் மௌனம் கலைத்து இருக்கிறார். அதில், நான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. நான் எப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன்தான் இருக்கிறேன். நான் கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யவில்லை.

இனியும் இல்லை
இனியும் கட்சிக்கு எதிராக நான் கிளர்ச்சி செய்ய மாட்டேன் என்று அஜித் பவார் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அஜித் பவாருக்கு முக்கிய அமைச்சரவை பதவி அளிக்கலாம் என்று கூறுகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் பெற போகும் 15 அமைச்சர் பதவியில் இவருக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

துணை முதல்வர்
சமயத்தில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக இவருக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் கட்சியிலும் அஜித் பாவருக்கு புதிய பதவிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications