பாஜக நடிகை.. தலைவர்களிடம் படாதபாடு படும் "நடிகைகளின் கன்னம்".. இப்ப கங்கனா ரனாவத்.. சிக்கிய எம்எல்ஏ
மும்பை: தன்னுடைய தொகுதியில், நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தைவிட சாஃப்ட்டான ரோடுகள் போடப்படும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ உறுதியளித்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை கங்கனா ரனாவத்.. இவர் அதிதீவிரமான பாஜக ஆதரவாளர் ஆவார்.. சமீபத்தில்தான் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.. சோஷியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருபவர் கங்கனா..
''இந்தியாவுக்கு 2014-ம் ஆண்டு தான் சுதந்திரம் கிடைத்தது...1947-ம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சை'' என்று இவர் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது...!

விமர்சனம்
அதேபோல, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை "காலிஸ்தான் பயங்கரவாதிகள்" என்று இவர் விமர்சித்ததை யாராலும் மறக்க முடியாது. எதையாவது தன்னை பற்றி அடிக்கடி சொல்லி ட்விட்டரில் ட்வீட்களை பதிவிட்டு கொள்வார்.. தன்னை ஒரு சக்தி வாய்ந்த பெண் என்று இவரே சொல்லி கொள்வார்.. அப்படிப்பட்ட நடிகையை, காங்கிரசின் எம்எல்ஏ ஒருவர் உதாரணமாக வைத்து பேட்டி தந்துள்ளார்.

எம்எல்ஏ
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.. இங்கு ஜம்தாரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் இர்பான் அன்சாரி.. இவர் ஒரு டாக்டரும்கூட.. தன்னுடைய தொகுதியில் உள்ள சாலைகள் எல்லாம் நடிகை கங்கனாவின் கன்னத்தைவிட சாஃப்ட்டாக அமைக்கப்படும் என்று உறுதி தந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அத்துடன் அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்.

ஜம்தாரா தொகுதி
வீடியோவில் அவர் சொல்லி இருப்பதாவது: "இந்த ஜம்தாரா தொகுதியில், நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட, சாலைகள் அனைத்தும் மென்மையாக அமைக்கப்படும்.. இதை நான் உறுதி தருகிறேன்.. 14 உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.. வழக்கமாக இந்த எம்எல்ஏ எப்போது பேசினாலும் சர்ச்சைகள் வெடிக்கும்.. இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு ஒரு மாஸ்க் அணிவது குறித்து ஒரு பேட்டி தந்தார்.. அதில், "யாரும் மாஸ்க் ரொம்ப நேரம் போடாதீங்க.. அப்படி போட்டிருந்தால், நோய்தான் வரும்..

சர்ச்சை பேட்டி
நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை, மறுபடியும் உள்ளே இழுக்கிறோம்.. அதுதான் நோய்க்கு காரணமாக இருக்கும்.. ஒரு டாக்டர் என்பதால் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன்" என்று கூறியிருந்தார்.. இந்த பேச்சின் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார் எம்எல்ஏ.. அதற்காக பாஜக ஆதரவாளர் என்று தெரிந்தும் கங்கனாவை எதுக்காக சாலைகளுடன் ஒப்பிட்டு இவர் பேசினார் என்று சொந்த கட்சியில் சர்ச்சை கிளம்பி உள்ளது..

கன்னங்கள்
சமீபகாலமாக, வடமாநில அரசியலில் மென்மை என்ற வார்த்தையை பயன்படுத்த, நடிகைகளின் கன்னங்களை ஒப்பிட்டு பேசுவது வழக்கமாகி வருகிறது.. இப்படித்தான், கடந்த ஆண்டு, ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குப்தா ஒரு பேட்டி தரும்போது, "இந்த மாநிலத்தில் உள்ள ரோடுகள் எல்லாம் நடிகை கத்ரினா கைஃபின் கன்னம் போலவே இருக்கும்" என்றார்.. அதேபோல, கடந்த மாதம் இன்னொரு ராஜஸ்தான் அமைச்சர் குல்பராவ் பாட்டீல் பேசும்போது, ஹேமாமாலினியின் கன்னம் போல மென்மையாக இருக்கும் என்றார்.. இப்படி பேசியதற்கு குல்பராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்றாலும், நடிகைகளின் கன்னங்கள் அரசியல்வாதிகளின் பேட்டிகளில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது..!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications